Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாட்டிலும் பணம், விளம்பரத்திலும் பணம்... கொடி கட்டிப் பறக்கும் டோணி!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் காட்டில் பண மழை அடை மழையாக கொட்டிக் கொண்டிருக்கிறதாம். விளம்பரம் மூலம் பெருமளவில் சம்பாதிக்கிறாராம் டோணி.

டோணி இந்திய அணிக்கு வந்த புதிதில் அவரது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இதனால் படு வேகமாக உயர்ந்து கேப்டன் பொறுப்பைப் பிடித்தார்.

கேப்டன் பொறுப்புக்கு வந்த பின்னர் தனது புதிய பாணி தலைமைத்துவத்தால் அனைவரையும் அசரடித்தார். மேலும் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்தும், டுவென்டி 20 உலகக் கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்று அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.

இடையில் அவரது கேப்டன் பதவிக்கு பெரும் ஆபத்து வந்தது இங்கிலாந்து தொடர் மூலம். இருப்பினும் அதையும் போராடி சமாளித்த டோணி தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவை இந்திய அணி புரட்டி புரட்டி தோற்கடித்து வருவதால் டோணிக்கும் இமேஜ் உயர்ந்துள்ளது.

அதிக வெற்றி பெற்ற கேப்டன்

அதிக வெற்றி பெற்ற கேப்டன்

ஆஸ்திரேலிய அணியை 2 டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தோற்கடித்ததன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த கேப்டன் என்ற புதிய பெருமை டோணிக்குக் கிடைத்துள்ளது.

விளம்பர இமேஜும் உயர்ந்தது

விளம்பர இமேஜும் உயர்ந்தது

இந்தப் புதிய பெருமையால் டோணியின் மார்க்கெட் இமேஜும் உயர்ந்துள்ளதாம். அவரது விளம்பர வருவாயும் பெரிய அளவில் உயர்ந்துள்ளதாம்.

15 விளம்பரங்களில்

15 விளம்பரங்களில்

தற்போது 15 நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசடராக இருக்கிறார் டோணி. அந்த நிறுவனங்களின் விளம்பரங்களில் அவர் நடிக்கிறார்.

ஒவ்வொன்றுக்கும் பல கோடி

ஒவ்வொன்றுக்கும் பல கோடி

ஒவ்வொரு விளம்பரத்திற்கும் சராசரியாக 6 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளமாக பெறுகிற் டோணி என்று கூறுகிறார்கள்.

மேலும் புதிய விளம்பரங்கள்

மேலும் புதிய விளம்பரங்கள்

இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து டோணி மீண்டுள்ளதால் அவரைத் தேடி புதிய விளம்பரங்கள் வரலாம் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், முடிவடையவுள்ள நிறுவன ஒப்பந்தங்களும் கூட நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் டோணி காட்டில் இப்போது பண மழை நிற்காமல் கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Thursday, March 7, 2013, 11:01 [IST]
Other articles published on Mar 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+