முதன் முறையாக 4 ஓவர் பவுலிங் செய்த டோணி
டெல்லி: பல்வேறு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியின் கேப்டன் டோணி முதன்முதலாக 4 ஓவர்கள் பந்து வீசியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் அரை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அரை இறுதியில் இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் டோணி பந்து வீச வந்தார். நேற்றைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
தனது பந்து வீச்சால் இலங்கை அணியை திணறடிக்கலாம் என்று நினைத்தார் டோணி. ஆனால் ஜெயவர்த்தனேவும், ஏஞ்சலோ மாத்யூஸும் டோணி வீசிய பந்துகளில் விளாசிவிட்டனர்.

4 ஓவர்கள் பவுலிங்
டோணி 4 ஓவர்கள் பந்து வீசினார். வழக்கமாக டோணி விக்கெட் கீப்பிங்கில் தான் நிற்பார்.

முதன்முறையாக
டோணி இதுவரை விளையாடிய 222 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேற்றைய போட்டியில் தான் முதன்முறையாக 4 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். இதற்கு முந்தைய சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 2 ஓவர்கள் பந்து வீசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications