Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நைட் ரைடர்ஸ்- கங்குலி கேப்டன் பதவி பறிப்பு

Ganguly
கொல்கத்தா: ஐபிஎல் சீசன் 2 தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கங்குலி ஒரு சில போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருப்பார். மற்ற போட்டிகளுக்கு கெய்ல், மெக்கலம் உள்ளிட்ட வீரர்கள் கேப்டனாக செயல்படுவார்கள் என அந்த அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவின் ஜான் புக்கானன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் சீசன் 2 தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தொடர் வரும் 18ம் தேதி துவங்குகிறது.

ஐபிஎல் அணிகளில் முக்கியமானதான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார் ஜான் புக்கானன். இவரது கண்காணிப்பின் கீழ்தான் ஆஸ்திரேலியா பலமான அணியாக உருவெடுத்து, 3வது முறையாக உலக கோப்பையை வென்றது.
ஒரு அணியின் வெற்றிக்கு என்ன தேவை என்பதை நன்கு உணர்ந்த புக்கானன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் பல புதுமைகளை புகுத்தி வருகிறார்.

வரும் ஐபிஎல் சீசன் 2வில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பல கேப்டன் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டிக்கு கேப்டனாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் அணியின் நிரந்தர கேப்டனாக இருப்பார் என கருதப்பட்ட கங்குலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புக்கானன் கூறுகையில், அணிக்கு பல கேப்டன்கள் இருப்பார்கள் என்ற முடிவுக்கும், கங்குலி கடந்த தொடரில் அணியை பைனலுக்கு அழைத்து செல்லாததற்கும் எந்த தொடர்பும் இல்லை. அணியில் எந்த பிளவும் இல்லை. வெஸ்ட் இண்டீசின் கெய்ல், நியூசிலாந்தின் மெக்கலம், கங்குலி என ஒரு போட்டிக்கு ஒரு கேப்டன் இருப்பார்கள்.

கங்குலி தான் கொல்கத்தாவின் மன்னர். ஒரு அணிக்கு பல கேப்டன்கள் என்பது புதுமையான ஒன்று தான். இது எந்த வகையில் கைகொடுக்கும் என்பது போக போக தான் தெரியும் என்றார் புக்கானன்.

இது குறித்து கங்குலி கூறுகையில், புக்கானன் அணியின் பயிற்சியாளர். அவர்களுக்கு என்று ஒரு திட்டம் இருக்கும். என்னுடைய எண்ணம் எல்லாம் ரன்கள் சேர்ப்பதிலும், விக்கெட் வீழ்த்துவதிலும் தான் இருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். பேட்டிங் செய்வது கடினம் என்றார் கங்குலி.

ஷாருக்குடன் மோதல் காரணமா..

புக்கானன் ரொடேஷன் முறையில் கேப்டன் பதவி என்று கூறினாலும் கூட, கங்குலியை ஓரம் கட்டும் முயற்சியே இது என்று கூறப்படுகிறது.

காரணம், கங்குலிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கானுக்கும் இடையே முன்பு போல நல்லுறவு இல்லை என்பது கிரிக்கெட் வட்டாரம் அறிந்த தகவல்.

மேலும் புக்கானனுக்கும், கங்குலிக்கும் இடையிலும் கூட இப்போது நல்லுறவு இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கங்குலியை இப்போது ரொடேஷன் முறை என்று கூறி தள்ளி விட ஆரம்பித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:24 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+