கேப்டவுன்: ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சவுரவ் கங்குலி நீக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான ஜான் புச்சானன், தனது அணிக்கு பல கேப்டன்களை நியமிக்க யோசனை தெரிவித்திருந்தார். இதற்கு முதலில் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் உடன்படவில்லை. கங்குலி மட்டுமே கேப்டன். அவர் இல்லாமல் அணி இல்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கங்குலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மெக்கல்லம் கேப்டனாகியுள்ளார். இதன் மூலம் பல கேப்டன் கொள்கையை கொல்கத்தா அணி அறிமுகப்படுத்தியிருப்பதாக கூற்படுகிறது.
ஐபிஎல் சீசன் 2போட்டிகள் நாளை தொடங்குகின்றன. கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் நாளை டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டிக்கு மெக்கல்லம் கேப்டனாக இருப்பார்.
வரும் போட்டிகளில் மெக்கல்லம் தவிர வேறு சிலரும் கூட கேப்டனாக பதவி வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.