ஐபிஎல் போட்டிகள்: பந்தை மெதுவாக வீசினால் கடும் அபராதம்

20 ஆயிரம் டாலர் முதல் 3.60 லட்சம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படுமாம். குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் 20 ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டம் அழ வேண்டியதுதான்.
ஒவ்வொரு அணிக்கும் பந்து வீசுவற்கு 80 நிமிடங்கள் அவகாசம் தரப்படும். அதில் ஒவ்வொரு பத்து ஓவர்களுக்கும் இடையில் ஏழரை நிமிடங்கள் இடைவெளி அவகாசமாக எடுத்துக் கொள்ளலாம். மொத்த போட்டியும் 3 மணி நேரம் 15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால், அந்த அணியின் கேப்டனுக்கு முதலில் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும். திரும்பத் திரும்ப மெதுவாகப் போட்டால் அந்த அணிக்கு கடும் அபராதம் காத்திருக்கிறது.
2வது முறையாக இந்தத் தவறை செய்தால், மொத்த அணிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படுமாம்.
3வது முறையாக செய்தால் மொத்த அணிக்கும் 3 லட்சத்து 60 ஆயிரம் டாலர் அபராதத்தோடு, அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு, ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
நாளை நியூலான்ட்ஸ் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
2வது போட்டியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியும் இதே மைதானத்தில்தான் நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:25 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications