Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியைக் கெளரவிக்கக் காத்திருக்கும் புதிய சாதனை

எட்பாஸ்டன்: கிரிக்கெட் கேப்டன் எவராலும் படைக்க முடியாத புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் இந்திய கேப்டன் டோணி.

இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் அது டோணிக்குப் புதிய சாதனையாக அமைந்தது.

இன்று கிடைத்த வெற்றியின் மூலம், ஐசிசியின் அத்தனை முக்கிய சாம்பியன் பட்டங்கள் அனைத்தையும் வென்ற ஒரே கிரிக்கெட் கேப்டன் என்ற பெயரை டோணி பெற்றார்.

ஏற்கனவே 2 பெரும் பட்டங்கள்

ஏற்கனவே 2 பெரும் பட்டங்கள்

ஏற்கனவே டோணி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்ப மற்றும் டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி

தற்போது சாம்பியன்ஸ் டிராபி

இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அது உலக சாதனையாகியுள்ளது.

இதுவரை யாருக்கும் கிட்டாத வெற்றி

இதுவரை யாருக்கும் கிட்டாத வெற்றி

உலக அளவில் எந்த ஒரு கேப்டனும், ஒரு நாள் கோப்பை, டுவென்டி 20 கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை வென்றதில்லை. எனவே இன்றைய வெற்றி டோணிக்கு பெரும் சாதனையைக் கொடுக்கும்.

ஏற்கனவே சாதனை படைத்த டோணி

ஏற்கனவே சாதனை படைத்த டோணி

அதேசமயம், டோணி ஏற்கனவே ஒரு சாதனையைப் படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கும் டோணி, இரண்டு முறை ஐபிஎல் கோப்பையையும், ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளார். வேறு எந்த கிளப் கேப்டனும் இப்படி இரண்டையும் வென்றதில்லை. இது கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் என்பதால் இன்றைய போட்டியை வெல்ல டோணி ஆர்வமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 24, 2013, 1:22 [IST]
Other articles published on Jun 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+