சொல்லலை, சயீத் அஜ்மல் ரொம்ப தமாஸா பேசுவாப்ளன்னு..!
ெங்களூர்: எல்லோரும் உங்களோட காதைக் கிட்டக்க கொண்டு வாங்க.. பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார்... அதாவது சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற அவரது பந்து வீச்சுதான் காரணமாம்... இதுதான் அந்த ரகசியம்.
தான் போட்ட தூஸ்ராவை சமாளிக்க முடியாமல்தான் ஓய்வு பெற்று ஓடி விட்டார் சச்சின் என்று 'அட்டகாசமாக' பேசியுள்ளார் அஜ்மல்.
2012ல் வங்கதேசத்தில் நடந்த ஆசியா கோப்பைப் போட்டியின்போது தான் வீசிய தூஸ்ராக்களை சச்சினால் சமாளிக்க முடியாமல் போனதால்தான் ஒரு நாள் போட்டிக்கு குட்பை சொல்லி விட்டாராம் சச்சின்...
அஜ்மல் மேலும் சொல்லியுள்ளதை ஒவ்வொரு ஸ்லைடாக படியுங்கள்...!

சூப்பர் சூப்பர்ஸ்டார் சச்சின்
சச்சின் டெண்டுல்கர் சாதாரண சூப்பர் ஸ்டார் அல்ல. மாறாக சூப்பர் சூப்பர் ஸ்டார். டாக்கா போட்டியில் அவரது விக்கெட்டை நான் எடுத்ததுதான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

வங்கதேசத்தில் மட்டுமல்ல.. மொஹாலியிலும்
வங்கதேசத்தில் நடந்த ஆசியாக் கோப்பைப் போட்டியில் நான் சச்சின் விக்கெட்டை எடுத்தது அவரது கிரிக்கெட் ஆட்டத்திற்கு முடிவு கட்டியது. மொஹாலியிலும் நான் சச்சினை மிரள வைத்தேன்.

சந்தோஷ நிமிடங்கள்
மொஹாலியில் 2011ல் நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் சச்சினை நான் வீழ்த்தியது பெருமைக்குரிய நிமிடமாகும்.

உலகத் தரம் வாய்ந்த வீரர்
சச்சின் உலகத் தரம் வாய்ந்த அசகாய வீரர். தொழில்முறைக் கிரிக்கெட்டில் 50,000 ரன்களைக் குவித்துள்ளார். எவ்வளவு பெரிய மனிதர்...

தூஸ்ராவை அவரால் சமாளிக்க முடியவில்லை
ஆனால் அப்படிப்பட்ட சச்சினாலேயே எனது தூஸ்ராவை சமாளிக்க முடியாமல் போய் விட்டது. ஆசியாக் கோப்பைப் போட்டியில் தூஸ்ராவைப் போட்டால் ஸ்லிப்பில் வைத்து சச்சினை எளிதாக பிடிக்கலாம் என்று கேப்டன் மிஸ்பா உல் ஹக் எனக்கு ஆலோசனை கூறினார். யூனிஸ் கானை ஸ்லிப்பில் நிறுத்தி வைத்தோம். அது நல்ல பலனைக் கொடுத்தது. சச்சின் அவுட்டாகி விட்டார்.

அதுதாங்க அவரை ஓய்வு பெற வைத்தது..
அந்த அவுட்தான் ஓய்வு முடிவை சச்சினை எடுக்க வைத்தது.. என்று சிரித்தபடி கூறினார் அஜ்மல்.


Click it and Unblock the Notifications