Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட்சயதிரிதியையை முன்னிட்டு சச்சின் 'பொற்காசுகள்' ரிலீஸ்...!

மும்பை: அட்சயதிரிதியையை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கரின் உருவம் பதித்த தங்கக் காசுகள் இன்று மும்பையில் வெளியிடப்பட்டன.

அந்த தங்கக் காசில் சச்சின் முகத்துடன் அவரது ஆட்டோகிராபும் இடம் பெற்றிருப்பது விசேஷமாகும்.

வேல்யூமார்ட் கோல்ட் மற்றும் ஜுவல்ஸ் என்ற நிறுவனம் இந்த தங்கக் காசுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. ஒவ்வொரு காசும் 10 கிராம் எடை கொண்டதாகும்.

ஒரு லட்சம் காசுகள்

ஒரு லட்சம் காசுகள்

மொத்தம் ஒரு லட்சம் தங்கக் காசுகள் முதல் கட்டமாக விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

சச்சின் முன்னிலையில்

சச்சின் முன்னிலையில்

மும்பையில் இன்று நடந்த விழாவில், சச்சின் முன்னிலையில் இந்த தங்கக் காசுகள் வெளியிடப்பட்டன.

ஒரு காசு ரூ. 34,000

ஒரு காசு ரூ. 34,000

24 காரட் தரத்திலான இந்த தங்க நாணயத்தின் ஒரு காசு ரூ. 34,000 ஆகும். வேல்யூமார்ட்கோல்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த காசுகள் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் முன்னணி நகைக் கடைகளிலும் இதை பெறலாம்.

பிராண்ட் அம்பாசடரும் கூட

பிராண்ட் அம்பாசடரும் கூட

வேல்யூ மார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராகவும் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் இப்பொறுப்பில் இருப்பார்.

தங்கமான நினைவுகள்

தங்கமான நினைவுகள்

நிகழ்ச்சியில் சச்சின் பேசுகையில்,பல தங்கமான நினைவுகள் எனக்கு கிரிக்கெட் களத்தில் கிடைத்துள்ளன. அவையெல்லாம் அபாரமானவை. அரியவை. அட்சயதிரிதியை தினமானது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வர உதவும்.

எனக்கே தங்கம் வாங்கத் தோணுது

எனக்கே தங்கம் வாங்கத் தோணுது

தங்கத்தைப் பார்த்தால் எனக்கே தங்கம் வாங்க வேண்டும் போல இருக்கிறது. சின்னதாக ஒரு தங்கச் சங்கிலியை கழுத்தில் போட்டுக் கொள்ள ஆசை வருகிறது. டீன் ஏஜ் வயதில் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் செயின் போட்டுள்ளேன் என்றார் சச்சின்.

Story first published: Monday, May 13, 2013, 15:52 [IST]
Other articles published on May 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+