சென்னையை எதிர்த்து விளையாடுவேன்- சச்சின் அறிவிப்பு

ஐபில் டுவென்டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக இதுவரை நடந்த எந்த போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக கேப்டனாக இருந்த ஹர்பஜன்சிங் தடை காரணமாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் போலக் கேப்டன் பொறுப்பை ஏற்றுவந்தார்.
காயத்தில் இருந்து மீண்டு சச்சின் எப்போது விளையாட வருவார் என்று ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருந்தனர். மும்பை தொடக்க வீரராக இலங்கை அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா இருப்பதால் அவருடன் சச்சின் ஜோடி சேர்ந்தால் போட்டி களைகட்டும் என்பதால் அவரது வரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக சச்சின் பேட்டிங் பயிற்சி எடு்த்துவருவதாக அணியி்ன் பயிற்சியாளர் ராஜ்புத் தெரிவித்தார்.
இந்நிலையில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடக்கின்ற போட்டியில் விளையாட இருப்பதாக சச்சின் அறிவித்துள்ளார். சக வீரர்கள், பயிற்சியாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் புதிய தெம்புடன் விரைவில் வந்து விட்டேன் என்று அவர் கூறினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications