முத்தரப்பு கிரிக்கெட்: மே. இந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா!
டிரினாட்: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களைக் குவித்தது. இந்தியாவின் ரோஹித் 46, தவான் 69 ரன்களைக் குவித்தனர். கேப்டன் கோஹ்லி 83 பந்துகளில் 102 ரன்களைக் குவித்தார்.

பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆடியது. 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை அந்த அணி எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் 39 ஓவர்களில் 274 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களையே மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்தது.
இதனால் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்த முத்தரப்பு போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ள முதல் வெற்றி இது.



Click it and Unblock the Notifications