For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓஜா சுழல் ஜாலம் - வீழ்ந்தது வங்காளதேசம்

By Staff

நாட்டிங்ஹாம்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் ஓஜா 4 விக்கெட் கைப்பற்றி அசத்த இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சேவக், ஆர் பி சிங் இடம்பெறவில்லை.

துவக்க வீரர்களாக காம்பீர், ரோகித் வந்தனர். அதிரடியாக பேட் செய்த ரோகித் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 23 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். காம்பீர் 46 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மூன்றாவது வீரராக வந்த தோனி 26 ரன்கள் எடுத்து, அவுட்டானார்.

அடுத்து வந்த யுவராஜ், வங்கதேச பந்துவீச்சை உண்டு இல்லை என பண்ணிவிட்டார். 4 சிக்சர்கள் விளாசிய அவர் 18 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். ரெய்னா 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட் செய்த வங்கதேசத்துக்கு சித்திக் அதிரடி துவக்கம் தந்தார். அவர் 22 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஓஜா சுழலில் வெளியேறினார். தமிம் இக்பால் 15, அஷ்ரபுல் 11 ரன்கள் எடுத்தனர். கடைசியில் வந்த நயிம் இஸ்லாம் 28 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை.

வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நான்கு ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஓஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

10ம் தேதி அயர்லாந்துடன் மோதல்...

இந்தியா வரும் 10ம் தேதி தனது இரண்டாவது போட்டியில் அயர்லாந்தை சந்திக்கிறது.

ஆஸி.யை வீழ்த்திய வெ.இண்டீஸ்...

நேற்று நடந்த மற்றொரு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் மோசமாக பேட் செய்தனர். வாட்சன், பாண்டிங் டக் அவுட்டானார்கள். மைக்கேல் கிளார்க் 2 ரன்களுக்கு அவுட்டானார். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய வார்னர் மட்டும் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கை தந்தார். அவர் 53 பந்தில் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

170 ரன்களை சேஸ் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு கேப்டன் கெய்ல், ஆன்ட்ரூ பிளட்சர் ஜோடி விளாசல் துவக்கம் தந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கெய்ல் 50 பந்தில் 88 ரன்கள் எடுத்தார். பிளட்சர் 32 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வென்றது.

நியூசிலாந்து வெற்றி...

டி பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஓவர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 7 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த நியூசிலாந்து 6 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+