டெஸ்ட் தர வரிசை: 2வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
துபாய்: எல்.ஜி. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தர வரிசைப் பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1க்கு என்ற கணக்கில் இந்தியா இழந்த போதிலும் கூட அதன் சிறப்பான ஆட்டத்தால் நான்காவது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், முதலிடத்தில் நீடிக்கிறது.
இதுவரை 2வது இடத்தில் இருந்த இலங்கை 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 4வது இடத்தில் உள்ளது. 5வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications