Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப் போட்டிக்குக் காத்திருக்கும் ஈடன்... 10 'மேட்டர்' கேளுங்க!

கொல்கத்தா: ஒரு வழியாக 6வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இன்று இரவு இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 50 நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு மைதானங்களில் 75 போட்டிகளை நடத்தி முடித்து இன்று இறுதிப் போட்டிக்கு வந்து நிற்கிறார்கள்.

இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 2 முறை சாம்பியனாகியுள்ளது. மும்பை இதுவரை சாம்பியன் பட்டத்தை நெருங்கியதில்லை. இன்றைய இறுதிப் போட்டி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்

சென்னைக்கு 5வது பைனல்

சென்னைக்கு 5வது பைனல்

சென்னை அணிக்கு இது 5வது இறுதிப் போட்டியாகும். இது ஐபிஎல் வரலாற்றில் சாதனையாகும். வேறு எந்த அணியும் இத்தனை இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றதில்லை.

முதல் முறையாக கொல்கத்தாவில்

முதல் முறையாக கொல்கத்தாவில்

ஐபிஎல் இறுதிப் போட்டி ஒன்று முதல் முறையாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

3வது முறையாக மும்பை

3வது முறையாக மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இது 2 வது முறையாகும்.

2 முறை சாம்பியன் சென்னை

2 முறை சாம்பியன் சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளில் கோப்பையை வென்று சாம்பியன் ஆகியுள்ளது.

2010ல் நடந்தது போலவே

2010ல் நடந்தது போலவே

2010 இறுதிப் போட்டியிலும் சென்னையும், மும்பையும்தான் மோதின. மும்பையில் நடந்த அந்தப் போட்டியில் சென்னை அணி 22 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சாம்பியனானது.

ஐபிஎல் கோப்பையும், ஆரஞ்சுத் தொப்பியும்

ஐபிஎல் கோப்பையும், ஆரஞ்சுத் தொப்பியும்

இதுவரை அதிக ரன்கள் குவித்து, ஆரஞ்சுத் தொப்பியைப் பெற்ற வீரர்கள் யாரும் கோப்பயை வென்ற அணியில் இருந்ததில்லை. ஆனால் அந்த சாதனையை படைக்க சென்னை வீரர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் அவர் 732 ரன்களுடன் இருக்கிறார்.

கெய்லை மிஞ்ச இன்னும் 2 ரன் தேவை

கெய்லை மிஞ்ச இன்னும் 2 ரன் தேவை

ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெயர் கிறிஸ் கெய்லிடம் உள்ளது. அவர் 733 ரன்களுடன் அந்த சாதனையை வைத்துள்ளார். அதை விஞ்ச ஹஸ்ஸிக்கு இன்னும் 2 ரன்கள் மட்டுமே தேவை.

சென்னை 2 தோல்வி

சென்னை 2 தோல்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், 2 முறை இறுதிப் போட்டியில் தோற்றுள்ளது. 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸிடமும், 2012ல் கொல்கத்தாத நைட் ரைடர்ஸிடமும் அது தோல்வியைத் தழுவியது.

பிராவாவோக்கு பர்ப்பிள்

பிராவாவோக்கு பர்ப்பிள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேயன் பிராவோவுக்கு அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான பர்ப்பிள் தொப்பி கிடைக்க இன்னும் ஒரு விக்கெட் தேவை. அவர் இதுவரை 28 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மும்பையின் கையே ஓங்கியிருக்கிறது

மும்பையின் கையே ஓங்கியிருக்கிறது

நடப்புத் தொடரில் சென்னையை விட மும்பையே சிறப்பாக விளையாடியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் மும்பை 2 போட்டிகளிலும், ஒரு போட்டியில் சென்னையும் வென்றுள்ளன.

Story first published: Sunday, May 26, 2013, 13:34 [IST]
Other articles published on May 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+