Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 6: சன் ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல்!

IPL 2013: Chennai Super Kings vs Sunrisers Hyderabad
சென்னை: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் 34வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுமே 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் விகிதத்தில் சென்னை அணி முன்னிலையில் இருக்கிறது. கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர் டெவலிஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், புனே வாரியாஸ் அணிகளிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வென்றுள்ளது. 2 ல் தோற்றுள்ளது. சென்னை அணியில் இன்றைய ஆட்டத்தில் டுபெலிசிஸ் இடம்பெறக் கூடும்.

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கேமரூன் செயல்படுவார். காயம் அடைந்த ஷிகார் தவான் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலுவாகும்.ஹைதராபாத் அணியில் ஸ்டெய்ன், அமித் மிஸ்ரா தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுகின்றனர். சம புள்ளிகளோடு சம வலுவாக இருக்கும் இரு அணிகளும் முதல் முறையாக மோதுவதால் இன்றைய போட்டியும் 'த்ரில்' ஆகவே இருக்கும்!

Story first published: Thursday, April 25, 2013, 10:13 [IST]
Other articles published on Apr 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+