Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''வாங்கடா.. வாங்கடா...'' வான்கடேவில் டெல்லியை விரட்டி விரட்டி அடித்த திணேஷ் கார்த்திக்!

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், திணேஷ் கார்த்திக் ஆடிய ஆட்டம் மும்பை ரசிகர்களை சந்தோஷக் கலக்கலில் கொண்டு போய் விட்டு விட்டது. குறிப்பாக அணியின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி உட்காரக் கூட முடியாத அளவுக்கு சந்தோஷத்தில் மூழ்கிப் போய் விட்டார்.

கேப்டன் ரிக்கி பான்டிங்கும், சச்சின் டெண்டுல்கரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாதல் ஆடிப் போன மும்பை ரசிகர்களுக்கு திணேஷ் கார்த்திக்கும், அடுத்து ரோஹித் சர்மாவும் ரன்களைக் குவித்து சந்தோஷப்படுத்தி விட்டனர்.

இந்தப் போட்டியின்போது அதிக ரன்களைக் குவித்து ஆரஞ்சுத் தொப்பியையும் விராத் கோஹ்லியிடமிருந்து தட்டிப் பறித்தார் திணேஷ் கார்த்திக்.

நேற்றைய போட்டியிலிருந்து சில துளிகள்...

இதுதாங்க முதல் பெரிய ஸ்கோர்

இதுதாங்க முதல் பெரிய ஸ்கோர்

6வது ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலிருந்தே சின்னச் சின்ன ஸ்கோராத்தான் இருந்து வந்தது. நேற்றுதான் முதல் முறையாக பெரிய ஸ்கோரை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

200க்கு மேல் இப்பத்தான் முதல் முறையாக

200க்கு மேல் இப்பத்தான் முதல் முறையாக

200 ரன்களுக்கு மேல் ஒரு அணி இந்தத் தொடரில் ரன் குவிப்பது இதுவே முதல் முறையாகும். அந்தப் பெருமையை மும்பை இந்தியன்ஸ் தட்டிச் சென்றுள்ளது.

இதுக்கு முன்னாடி 165

இதுக்கு முன்னாடி 165

இந்தப் போட்டிக்கு முன்பு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்த 165 ரன்களே பெரிய ஸ்கோராக இருந்தது.

திணேஷ் போட்ட போடு

திணேஷ் போட்ட போடு

மும்பை இந்தியன்ஸ் அணியின் திணேஷ் கார்த்திக் நேற்று அதிரடியாக ஆடினார். 48 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 86 ரன்களை கொளுத்திப் போட்டார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம்.

கோஹ்லிக்கு சாதா தொப்பி.. திணேஷுக்கு ஆரஞ்சு

கோஹ்லிக்கு சாதா தொப்பி.. திணேஷுக்கு ஆரஞ்சு

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் விராத் கோஹ்லிதான் இருந்து வந்தார். இதனால் அவரிடம் ஆரஞ்சு தொப்பி இருந்தது. நேற்று 183 ரன்களைக் குவித்து ஆரஞ்சுத் தொப்பியை தட்டிப் பறித்தார் திணேஷ்.

டெல்லிக்கு மூன்றாவது தோல்வி

டெல்லிக்கு மூன்றாவது தோல்வி

டெல்லி டேர்டெவில்ஸ் சந்திக்கும் 3வது தோல்வி இது. முதலில் கொல்கத்தாவிடமும், 2வதாக ராஜஸ்தானிடமும் தோல்வியடைந்திருந்தது அந்த அணி.

ஷேவாக் இல்லையேப்பா...

ஷேவாக் இல்லையேப்பா...

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முக்கிய வீரரான வீரேந்திர ஷேவாக் தொடர்ந்து கலந்து கொள்ளாமலேயே இருக்கிறார். அதேசமயம், முக்கியப் பந்து வீச்சாளரான மார்னி மார்க்கல் திரும்பியுள்ளார்.

மலிங்காவுக்கு முதல் போட்டி

மலிங்காவுக்கு முதல் போட்டி

நேற்றுதான் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் ஆடினார் மும்பை இந்தியன்ஸின் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா.

சிக்ஸிலும், பவுண்டரியிலும் மும்பையே டாப்

சிக்ஸிலும், பவுண்டரியிலும் மும்பையே டாப்

சிக்ஸர்கள் விளாசுவதிலும், பவுண்டரிகளை அடிப்பதிலும் மும்பையே டாப்பில் இருந்தது. இந்த அணி 21 பவுண்டரிகளையும், 10 சிக்ஸர்களையும் அடித்தது. டெல்லி அணியோ 5 சிக்ஸர்களையுமம், 15 பவுண்டரிகளையும் மட்டுமே விளாசியது.

அதிரடி அம்பட்டி

அதிரடி அம்பட்டி

மும்பை அணியின் அம்பட்டி ராயிடு அதிரடியாக ஆடி 300 ஸ்டிரைக் ரேட்டுடன் பேட் செய்து பயமுறுத்தினார். வெறும் 8 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 24 ரன்களைக் குவித்தார்.

முதல் ஓவரில் அவுட்டாகி முதல் பந்தில் கலக்கிய ரிக்கி

முதல் ஓவரில் அவுட்டாகி முதல் பந்தில் கலக்கிய ரிக்கி

மும்பை இந்தியன்ஸ் பேட் செய்தபோது முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் கேப்டன் ரிக்கி பான்டிங். அதேசமயம், அவர் பீல்டிங் செய்தபோது, டெல்லிக்கு எதிரான பவுலிங்கின்போது முதல் பந்திலேயே அட்டகாசமான கேட்ச் பிடித்து தனது அணிக்கு முதல் விக்கெட்டைப் பெற்றுத் தந்தார்.

1.3 ஓவரில் 1/2

1.3 ஓவரில் 1/2

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தொடங்கியபோது 1. 3 ஓவர்களில் மும்பை 2 விக்கெட் இழந்து ஒரு ரன்னில் பரிதாபமாக இருந்தது.

13.1 ஓவரில் 132/2

13.1 ஓவரில் 132/2

ஆனால் 13.1 ஓவரில் அந்த அணி அதே 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களைக் குவித்து வலுவான நிலையை எட்டியிருந்தது.

ஓவருக்கு 10.02

ஓவருக்கு 10.02

திணேஷ் கார்த்திக்கும், ரோஹித் சர்மாவும் சேர்ந்து ஓவருக்கு 10.02 ஓவர்கள் என்ற அளவில் அதிரடியாக ஆடினர்.

சிங்கம் சிங்கிளாத்தாய்யா ஆடும்

சிங்கம் சிங்கிளாத்தாய்யா ஆடும்

டெல்லி அணியில் டேவிட் வார்னர் மட்டுமே கடுமையாக தனித்துப் போராடினார். 37 பந்துகளில் அவர் 61 ரன்களைக் குவித்தார். ஆனாலும் அணிக்கு அது உதவவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

Story first published: Wednesday, April 10, 2013, 11:14 [IST]
Other articles published on Apr 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+