Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விசில் போட்ட ரசிகர்களின் கண்களில் 'தக்காளி சட்டினி்'யை வர வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

மும்பை: டெல்லி டேர்டெவில்ஸ் படு மோசமாக ஆடிய கதையைச் சொல்லி வாய் மூ்டவில்லை. அதற்குள் நம்மவர்கள் நாஸ்தியாக ஆடி சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டனர்.

இதுவரை இப்படி ஒரு மெத்தனமான ஆட்டத்தை சென்னை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். கொஞ்சம் கூட சுதாரிப்பே இல்லாத பேட்டிங், வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இல்லாதது, பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தது என ஏகப்பட்ட குழப்பங்கள். கத்துக்குட்டிகள் போல பேட் செய்த முன்னணி வீரர்களைப் பார்த்தபோது ரசிகர்களின் கண்களில் தக்காளிச் சட்டினிதான் வந்தது.

ஏகப்பட்ட அவப் பெயரை இந்த ஒரு போட்டியின் மூலம் சம்பாதித்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுல என்ன ஹைலைட்னா - இதுவரை தனது ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு மோசமான ஸ்கோரை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்ததில்லை என்பதுதான்.

சரி ஹைலைட்ஸைப் பார்ப்போம்....

3 கேட்ச்சை மிஸ் செய்த போலார்ட்

3 கேட்ச்சை மிஸ் செய்த போலார்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட் செய்தபோது மும்பை பீல்டர் கீரன் போலார்ட் அடுத்தடுத்து 3 கேட்ச்களை மிஸ் செய்து ரசிகர்களை அலறடித்தார். இது ஒரு புதிய சாதனையாக மாறிப் போனது.

அசட்டையின் மறு உருவம்

அசட்டையின் மறு உருவம்

140 ரன் வெற்றி இலக்கை சென்னை மிக எளிமையாக சேஸ் செய்து விடும் என்றுதான் அத்தனை பேரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மிட்சல் ஜான்சன் ரூபத்தில் மும்பை அணி, சென்னைக்கு ஆப்பு வைத்து விட்டது.

20 ஓவர் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை

20 ஓவர் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை

சென்னை அணியால் 20 ஓவர்களைக் கூட தொட முடியாமல் போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 15.2 ஓவர்களிலேயே அவர்கள் சுருண்டு போய் விட்டனர்.

100 ரன் கூடவா எடுக்க முடியாது

100 ரன் கூடவா எடுக்க முடியாது

அதை விட மோசமானது 100 ரன்களைக் கூட தொடாமல் சென்னை துவண்டு போனதுதான். இவ்வளவு அலட்சியமாகவா ஆடுவது என்று ரசிகர்கள் கேட்கிறார்கள் - ஆனால் பதில் வராதே...

அட, வாங்கடேவில் சென்னை ஜெயித்ததே இல்லைடே...

அட, வாங்கடேவில் சென்னை ஜெயித்ததே இல்லைடே...

வாங்கடே மைதானத்தில் இதுவரை மும்பையுடன் மோதிய ஒரு போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதில்லை என்பது இன்னொரு வரலாறு.

மும்பையில் தொடர்ந்து 5வது வெற்றி

மும்பையில் தொடர்ந்து 5வது வெற்றி

மும்பை அணி சொந்த ஊரில் தொடர்ந்து 5வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

2 முறை சென்னையை உலுக்கிய மும்பை

2 முறை சென்னையை உலுக்கிய மும்பை

இந்த ஐபிஎல் சீசனில் 2 முறை மும்பையும், சென்னையும் மோதியுள்ளன. இரண்டிலுமே மும்பைதான் வென்றுள்ளது.

மும்பைக்கு 3 ... நமக்கு அதே 1

மும்பைக்கு 3 ... நமக்கு அதே 1

நேற்றைய வெற்றியின்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அதே முதலிடத்தில் தொடருகிறது.

ஒரு வெற்றி மட்டும் கிடைத்திருந்தால்

ஒரு வெற்றி மட்டும் கிடைத்திருந்தால்

நேற்று மட்டும் நாம் வென்றிருந்தால், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து அதிக வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெயர் நமக்குக் கிடைத்திருக்கும். நடப்பு தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளை வென்றிருந்தது சென்னை.

முதல் முறையாக 100க்குள்

முதல் முறையாக 100க்குள்

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 100 ரன்களுக்கும் குறைவான ஸ்கோரை எடுத்துள்ளது சென்னை சூப்பர்கிங்ஸ்.

ஒரே ஒரு சிக்ஸ்தான் மச்சி

ஒரே ஒரு சிக்ஸ்தான் மச்சி

சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங்கின்போது ஒரே ஒரு சிக்ஸையும், 6 பவுண்டரிகளையும் மட்டும் அதன் பேட்ஸ்மென்கள் எடுத்தனர்.

3 வாட்டி உயிர் பிழைத்த ஹஸ்ஸி

3 வாட்டி உயிர் பிழைத்த ஹஸ்ஸி

மிட்சல் ஜான்சன் வீசிய ஓவரின்போது, மைக்கேல் ஹஸ்ஸி அடித்த பந்துகளை அடுத்தடுத்து 3 முறை கேட்ச் பிடிக்க முடியாமல் தவற விட்டார் போலார்ட். ஆனால் அதே ஜான்சன் வீசிய பந்தை ரெய்னா அடித்தபோது, மிக மிக கஷ்டமான அந்த கேடச்சை போராடிப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் போலார்ட்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்

ஒரே ஓவரில் 3 விக்கெட்

ஜான்சன் தனது அபார பந்து வீச்சால் ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இரு பந்துகளில் முரளி விஜய் மற்றும் ரெய்னாவை காலி செய்த அவர் 5வது பந்தில் பத்ரிநாத்தைப் பதம் பார்த்தார்.

முந்தைய போட்டியில் 100... நேற்றைய போட்டியில் முட்டை

முந்தைய போட்டியில் 100... நேற்றைய போட்டியில் முட்டை

சுரேஷ் ரெய்னா இந்தப் போட்டிக்கு முந்தைய போட்டியில்தான் அபாரமான சதம் போட்டிருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் முட்டையுடன் அவர் சுருண்டது பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.

தொடரும் சச்சின் சொதப்பல்

தொடரும் சச்சின் சொதப்பல்

நடப்பு ஐபிஎல் தொடரில் சச்சின் தொடர்ந்து சொதப்பி வருகிறார். நேற்றும் அவர் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ரன் வள்ளல் பென்

ரன் வள்ளல் பென்

சென்னை சூப்பர் கிங்ஸின் பந்து வீச்சாளர் பென் லாலின்தான் ரன்களை வாரிக் கொடுத்த வள்ளலாக நேற்று திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 46 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதையும் பறிக்கவில்லை.

தப்பா... தவறா...?

தப்பா... தவறா...?

தெரிந்து செய்தால் தப்பு, தெரியாமல் செய்தால் தவறு என்பார்கள். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய விதத்தைப் பார்த்தபோது இந்த சந்தேகம்தான் வந்தது... அடுத்த போட்டிகளிலாவது பார்த்து விளையாடுங்கப்பா.

Story first published: Monday, May 6, 2013, 9:06 [IST]
Other articles published on May 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+