Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் ஒற்றைப் போராட்டம்.. வெற்றியை இழந்த சென்னை.. இதயம் நொறுங்கிய ரசிகர்கள்!

சென்னை: கேப்டன் டோணியின் கடுமையான போராட்டம் பலன் கொடுக்காமல் வெற்றி கை நழுவிப் போனதால் நேற்றைய இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சோகமான ராத்திரியாக மாறிப் போனது.

6வது ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

முதலில் மும்பை பேட் செய்தது. ஆரம்பத்தில் சிறப்பாகவே பவுலிங் செய்த சென்னையை பின்னர் மும்பை இந்தியன்ஸின் கீரன் போலார்ட், கண்களில் விரலை விட்டு ஆட்டி விட்டார். அவரது அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் நல்ல ஸ்கோரை எட்டி விட்டது.

பின்னர் விளையாடிய சென்னை அணியை கரை சேர்க்க கேப்டன் டோணி தனி நபராக போராடிப் பார்த்தார். ஆனால்தோல்வியே கிடைத்தது...

நேற்றைய போட்டியின் ஹைலைட்ஸ்...

ஜஸ்ட் 12 ரன்கள்...தவிடுபொடியாக்கிய முனாப் படேல்

ஜஸ்ட் 12 ரன்கள்...தவிடுபொடியாக்கிய முனாப் படேல்

கடைசி ஓவரில், சென்னை அணி வெற்றி பெற12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் மும்பையின் பந்து வீச்சாளர் முனாப் படேல் அதை தவிடுபொடியாக்கி விட்டார்.

கடைசி ஓவரிலும் தில்லாக ஆடிய டோணி

கடைசி ஓவரிலும் தில்லாக ஆடிய டோணி

கடைசிஓவரிலும் கூட டோணி படு தில்லாகவும், தன்னம்பிக்கையுடனும் ஆடினார். முனாப் படேலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். ஆனால் முல் பந்திலேயே டோணியை அவுட்டாக்கி விட்டார் முனாப் படேல். அது சென்னை அணியின் 9வது விக்கெட் ஆகும்.

ராஜ்புத் சேர்த்த 2 ரன்கள்

ராஜ்புத் சேர்த்த 2 ரன்கள்

அதைத் தொடர்ந்து வந்த அங்கி்த் ராஜ்புத் தடுமாறியபடி ஆடினார். 2 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் சென்னையை தோல்வியைத் தழுவியது.

18வது ஓவரில் பிரளயம் காட்டிய டோணி

18வது ஓவரில் பிரளயம் காட்டிய டோணி

18வது ஓவரின்போது டோணி அபாரமாக ஆடி ரன் குவித்தார். போலார்ட் பந்தை எதிர்கொண்ட அவர், 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார்.

டோணி இருந்தா வெற்றிதான்

டோணி இருந்தா வெற்றிதான்

ஒருவேளை நேற்று கடைசி ஓவரில் டோணி அவுட்டாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் சென்னை வெற்றி பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.

போலார்ட்தான் ஆட்ட நாயகன்

போலார்ட்தான் ஆட்ட நாயகன்

சிறப்பாக ஆடி மும்பைக்கு வெற்றி தேடித் தந்த போலார்ட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

26 பந்துகளில் 51 ரன் குவித்த டோணி

26 பந்துகளில் 51 ரன் குவித்த டோணி

சென்னை கேப்டன் டோணி 26 பந்துகளில் 51 ரன்களைக் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடக்கம்.

எப்ப வந்தாரு தெரியுமா...?

எப்ப வந்தாரு தெரியுமா...?

10.2 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்களை இழந்து 58 ரன்கள் என்ற கஷ்டமான நிலையில் இருந்தபோதுதான் டோணி ஆடவந்தார். பின்னர் அவரது அதிரடியால் படு வேகமாக சென்னையின் ரன் ரேட் ஏறத் தொடங்கியது.

2 முறை தப்பிய ஹஸ்ஸி

2 முறை தப்பிய ஹஸ்ஸி

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஹஸ்ஸி 2 முறை அவுட்டாவதிலிருந்து தப்பினார்.

மும்பைக்கு லைப் கொடுத்த பிரக்யான்

மும்பைக்கு லைப் கொடுத்த பிரக்யான்

மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா சிறப்பாக பந்து வீசி, 4 ஓவர், 16 ரன்கள், 2 விக்கெட் என்று மும்பைக்குக் கை கொடுத்தார்.

முனாபுக்கு 3

முனாபுக்கு 3

அதேசமயம், மும்பை அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் முனாப் படேல். அவர் வீழ்த்தியது 3 விக்கெட்கள். கொடுத்த ரன்கள் 29.

சச்சினுக்கு முட்டை

சச்சினுக்கு முட்டை

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சச்சின் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை டிர்க் நான்ஸ் ஆட்டமிழக்கச் செய்தார்.

சச்சின் ஆடாட்டி மும்பைக்கு வெற்றிதான்

சச்சின் ஆடாட்டி மும்பைக்கு வெற்றிதான்

இதில் இன்னொரு சுவாரஸ்யமும் உள்ளடங்கியுள்ளது. சச்சின் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார். அந்த நான்கு முறையும் மும்பை வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Sunday, April 7, 2013, 9:43 [IST]
Other articles published on Apr 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+