Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடே, சச்சின் விளையாடிட்டாரே...!!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சோபிக்காத சச்சின் டெண்டுல்கர் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 48 ரன்களை எடுத்தார்.

நேற்றைய வெற்றியின் மூ்லம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் தகுதி சற்று பிரகாசமாகியுள்ளது. அதேசமயம், பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெறாமல் போகும் அபாயத்தை நெருங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை 170 ரன்களைக் குவித்தது. அதை சேஸ் செய்த கொல்கத்தா அணி, 18.2 ஓவர்களிலேயே 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றுப் போனது.

இந்தப் போட்டியின் ஹைலைட்ஸ்

கொல்கத்தாவுக்கு 8வது தோல்வி

கொல்கத்தாவுக்கு 8வது தோல்வி

இந்தத் தோல்வியானது கொல்கத்தாவுக்கு 8வது தோல்வியாகும். அதேசமயம், மும்பை இந்தியன்ஸுக்கு உள்ளூர் மைதானத்தில் தொடர்ந்து 6வது வெற்றியாகும்.

'பஜ்ஜி' பந்து வீச்சில் சுருண்ட 'ரசகுல்லா'

'பஜ்ஜி' பந்து வீச்சில் சுருண்ட 'ரசகுல்லா'

ஹர்பஜன் சிங்கின் சிறப்பான பந்து வீச்சில் நேற்று கொல்கத்தா சுருண்டு போனது. ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களைச் சாய்த்தார். மிட்சல் ஜான்சன், பிரக்யான் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மலிங்கா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அடித்து ஆடிய சச்சின்

அடித்து ஆடிய சச்சின்

இந்தப் போட்டியில் சச்சினின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. வழக்கத்திற்கு விரோதமாக அடித்து ஆடினார். 28 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளுடன் 48 ரன்களைக் குவித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு

நீண்ட நாட்களுக்குப் பிறகு

நீண்ட் நாட்களுக்குப் பிறகு நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சச்சின். பான்டிங்கும் அவரும் சேர்ந்து சொதப்பல்ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சச்சின் நேற்று பார்முக்குத் திரும்பி அணியினரின் வயிற்றில் பால் வார்த்தார்.

வழக்கம்போல கார்த்திக் அதிரடி

வழக்கம்போல கார்த்திக் அதிரடி

வழக்கம்போல திணேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடினார். 18 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 34 ரன்களை விளாசினார். கடைசி வரை ஆட்டமும் இழக்கவில்லை.

புள்ளிப் பட்டியலில் 2வது இடம்

புள்ளிப் பட்டியலில் 2வது இடம்

நேற்றைய வெற்றியைத்தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். 16 புள்ளிகளுடன் அது 2வது இடத்திற்கு வந்துள்ளது.

7வது இடத்தில் கொல்கத்தா

7வது இடத்தில் கொல்கத்தா

அதேசமயம் கொல்கத்தாஅணி 12 போட்டிகளில் 8 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில்7வது இடத்தில் இருக்கிறது.

பலே பாலாஜி

பலே பாலாஜி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சில் நேற்று பாலாஜி பளிச்சிட்டார். தனது அணியின் முதல் ஓவரையே மெய்டனாக போட்டு அசத்தினார். மொத்தம் 3 ஓவர்களை வீசிய அவர்ஒரு மெய்டன், 7 ரன்கள் என்று பயமுறுத்தி விட்டார். இருப்பினும் விக்கெட் எதையும் அவர் வீ்ழ்த்தவில்லை.

பாலாஜிக்கு ஏன் 4வது ஓவர் தரவில்லை

பாலாஜிக்கு ஏன் 4வது ஓவர் தரவில்லை

சிறப்பாக பந்து வீசி ரன்களைக் கட்டுப்படுத்தியபோதும், பாலாஜிக்கு 4வது ஓவரை ஏன் கேப்டன் கம்பீர் தரவில்லை என்று தெரியவில்லை.

கடைசி ஓவரில் வெளுத்த மும்பை

கடைசி ஓவரில் வெளுத்த மும்பை

பாலாஜிக்கு கடைசி ஓவரைத் தராமல் ரியான் மெக்லேரனுக்கு அந்த ஓவரைக் கொடுத்தார் கம்பீர். அந்த கடைசி ஓவரில் மும்பை அணி 25 ரன்களை வெளுத்து விட்டது.

சச்சின் போட்ட 5 தொடர் பவுண்டரி

சச்சின் போட்ட 5 தொடர் பவுண்டரி

மெக்லேரன் வீசிய ஒரு ஓவரில் சச்சின் ரன் விருந்து கொடுத்தார். அதாவது தொடர்ந்து 5 பவுண்டரிகளை அவர் விளாசினார்.

லைட் இல்லாமல் பாதிக்கப்பட்ட ஆட்டம்

லைட் இல்லாமல் பாதிக்கப்பட்ட ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 9வது ஓவரின்போது விளக்கொளி கோபுரம் பழுதடைந்து விளக்கு அணைந்ததால் 17 நிமிடங்களுக்கு ஆட்டம் பாதிக்கப்பட்டது.

Story first published: Wednesday, May 8, 2013, 8:53 [IST]
Other articles published on May 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+