Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் ரெய்னா.... 'சன்'னை பந்தாடி பரவசப்படுத்திய சென்னை சூப்பர்கிங்ஸ்!

ஹைதராபாத்: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின்போது கிரிக்கெட்டே ஆடத் தெரியாத அணி போல மோசமாக ஆடி தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை மிக அருமையாக தோற்கடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.

மைக் ஹஸ்ஸி முதலில் எடுத்துக்கொடுக்க அதை பின்பற்றி சுரேஷ் ரெய்னா போட்டு நொறுக்கி விட்டார் ஹைதராபாத் பவுலிங்கை. இதனால் பெரும் ரன்களைக் குவித்து விட்ட சென்னை, பின்னர் பந்து வீச்சில் ஹைதராபாத்தை சுருட்டிப் போட்டு விட்டது.

52 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 99 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசிப் பந்தில் அவர் ஆட்டமிழக்கவிருந்தார். ஆனால் மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுத்ததோடு, அது நோ பால் ஆனதால் ப்ரீஹிட்டும் கிடைத்து அதை பவுண்டரிக்கு விரட்டினார் ரெய்னா.

போட்டியின் ஹைலைட்ஸ்...

போட்டியின் ஹைலைட்ஸ்...

ஹைதராபாத்தை அங்கேயே தோற்கடித்த முதல் அணி

நேற்று ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்ததன் மூலம், ஹைதராபாத்தை சொந்த ஊரில் தோற்கடித்த முதல் அணி என்ற பெயர் சென்னை சூப்பர் கிங்ஸுக்குக் கிடைத்தது.

பிளே ஆப்புக்கு தகுதி

பிளே ஆப்புக்கு தகுதி

இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆப் பிரிவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.

பாதியிலேயே நம்பிக்கை இழந்து போன ஹைதராபாத்

பாதியிலேயே நம்பிக்கை இழந்து போன ஹைதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரை எட்ட முடியாது என்று போட்டியின் பாதியிலேயே உறுதியாகி விட்டது. இதனால் ஹைதராபாத் அணி கடைசி வரை சும்மாவாச்சும் ஆடலாமே என்ற ரீதியில்தான் விளையாடியது.

20 ஓவர் வரை ஆடியதே சாதனைதான்

20 ஓவர் வரை ஆடியதே சாதனைதான்

சன் ரைசர்ஸ் அணி தனது முழுக் கோட்டாவான 20 ஓவர்கள் வரை நின்றதே பெரிய சாதனைதான். 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.

மிரட்டிய ஸ்டெயின்

மிரட்டிய ஸ்டெயின்

சென்னை அணியின் பேட்டிங்கின்போது டேல்ஸ்டெயின் முதல் ஓவரே மெய்டன் போட்டு மிரட்டினார். அவரது பந்துகளை சென்னை வீரர்களால் அடிக்கவே முடியவில்லை. ஆனால் அவரைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் அத்தனை பேரையும் பிரித்து மேய்ந்து விட்டனர் சென்னை வீரர்கள்.

அசத்திய ஹஸ்ஸி

அசத்திய ஹஸ்ஸி

முதலில் நிதானமாக ஆடிய மைக் ஹஸ்ஸி பின்னர் சிறப்பாக ஆடி 67 ரன்களைக் குவித்தார்.

அதிரடி முரளி விஜய்

அதிரடி முரளி விஜய்

இருப்பினும் முரளி விஜய் அதிரடியாக மாறி இஷாந்த் சர்மா ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். அதி வேகமாக ஆடிய இவர்29 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

13 போட்டிகள் ... 10 வெற்றி

13 போட்டிகள் ... 10 வெற்றி

13 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள சென்னை நேற்று தனது 10வது வெற்றியைப் பெற்றது.

தொடர்நது முதலிடம்

தொடர்நது முதலிடம்

20 புள்ளகிளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆணித்தரமாக உட்கார்ந்திருக்கிறது.

10 வெற்றி பெற்ற முதல் அணி

10 வெற்றி பெற்ற முதல் அணி

இந்த சீசனில் 10 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெயரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது.

ஹைதராபாத்துக்கு தொடர் வெற்றி நின்றது

ஹைதராபாத்துக்கு தொடர் வெற்றி நின்றது

ஹைதராபாத் அணி தொடர்ந்து உள்ளூரில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்தது. நேற்று 6வது முறை வெல்லும் கனவு தகர்ந்து போனது.

விடாமல் போராடிய பார்த்திவ் படேல்

விடாமல் போராடிய பார்த்திவ் படேல்

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான பார்த்திவ் படேல் விடாமுயற்சியுடன் ஆடினார். அவர் 44 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

நினைத்தால் சதம் போட்டிருக்கலாம் ரெய்னா

நினைத்தால் சதம் போட்டிருக்கலாம் ரெய்னா

நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா சதம் அடிக்க நிறைய வாய்ப்பிருந்தது. ஆனால் அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடைசிப் பந்து நோ பால் ஆகி ப்ரீ ஹிட் கிடைத்தது.அதை சிக்சருக்கு அனுப்பியிருந்தால் அவர் சதம் போட்டிருக்கலாம். ஆனால் பவுண்டரிதான் அடித்தார் அவர்.

இதுவரை 458 ரன்கள்

இதுவரை 458 ரன்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் ரெய்னா 458 ரன்களை இதுவரை குவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 400 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரரும் ரெய்னாதான். ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதல் தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அவர் 400 அல்லது அதற்கு மேல்தான் ரன் குவித்து வருகிறார் என்பது விசேஷமானது.

அந்தக் கணக்கு இதோ...

அந்தக் கணக்கு இதோ...

2008ல் 421 ரன்களையும், 2009ல் 434 ரன்களையும், 2010ல் 520 ரன்களையும், 2011ல் 438 ரன்களையும், 2012ல் 441 ரன்களையும் குவித்துள்ளார் ரெய்னா.

மறுபடியும் ஹஸ்ஸிக்கு ஆரஞ்சு

மறுபடியும் ஹஸ்ஸிக்கு ஆரஞ்சு

நேற்றைய போட்டியில் 67 ரன்களைக் குவித்த மைக் ஹஸ்ஸி, மீண்டும் ஆரஞ்சுத் தொப்பியைக் கைப்பற்றினார். அவர் இதுவரை 574 ரன்களைக் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெய்ல் உள்ளார்.

டேஞ்சரஸ் ஸ்டெயின்

டேஞ்சரஸ் ஸ்டெயின்

ஹைதராபாத் அணியின் டேல் ஸ்டெயின் அபாயகரமானவராக நேற்று பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இருப்பினும் விக்கெட் வீழ்த்தவில்லை.

Story first published: Thursday, May 9, 2013, 10:31 [IST]
Other articles published on May 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+