Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

27 பந்து... 8 சிக்ஸ்... 66 ரன்.. பொளந்து கட்டிய போலார்ட்.. முதலிடத்தைப் பிடித்தது மும்பை

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை நையப்புடைத்து விட்டது. குறிப்பாக அந்த அணியின் அதிரடிவீரர் கீரன் போலார்ட் பின்னி எடுத்து விட்டார்.

27 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 8 சிக்ஸர்களுடன் 66 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

ஹைலைட்ஸ்...

போலார்ட் பொழிந்த சிக்ஸ் மழை

போலார்ட் பொழிந்த சிக்ஸ் மழை

நேற்றைய போட்டியில் கீரன் போலார்ட் சிக்ஸ் மழை பொழிந்து அணிக்கு பெரும் உயர்வு கொடுத்தார்.

வந்த பந்தெல்லாம் நொந்து போனது

வந்த பந்தெல்லாம் நொந்து போனது

போலார்டுக்கு வீசப்பட்ட பந்தெல்லாம் நொந்து போகுமளவுக்கு அடித்து நொறுக்கி விட்டார் அவர்.

66 ரன்கள் குவிப்பு

66 ரன்கள் குவிப்பு

27 பந்துகளை மட்டுமே சந்தித்த போலார்ட் 66 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடக்கம்.

முதலிடத்தைப் பிடித்தது

முதலிடத்தைப் பிடித்தது

இந்த வெற்றியின் மூலம் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நெட் ரன் ரேட் குறைவு காரணமாக 2வது இடத்திற்கு இறங்கி விட்டது.

7க்கு 7

7க்கு 7

மும்பை இந்தியன்ஸ் அணி மும்பையில் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளது. அனைத்துப் போட்டிகளிலுமே வென்று சாதனை படைத்துள்ளது.

முதலில் ஆடிய ஹைதராபாத்

முதலில் ஆடிய ஹைதராபாத்

முன்னதாக முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்தது.

3 பந்துகள் மிச்சம் வைத்து வெற்றி

3 பந்துகள் மிச்சம் வைத்து வெற்றி

இதை துரத்திய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிய 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

6 பந்துகளில் அபாரம்

6 பந்துகளில் அபாரம்

அதிரடியாக ஆடிய போலாராட் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் முதல் பந்தை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். மற்ற ஐந்து பந்துகளையும் அவர் சிகஸருக்கு விரட்டினார். மொத்தம் 34 ரன்களை இந்த ஒரே ஓவரில் எடுத்து விட்டார் போலார்ட்.

பாவம் பெரைரா

பாவம் பெரைரா

சன் ரைசர்ஸ் பந்து வீச்சாளர் பெரைரா பாவம்.. அவரைப் பொளந்து விட்டார் போலார்ட். 3.3 ஓவர்கள் வீசிய பெரைரா விக்கெட் வீழ்த்தாமல் 55 ரன்களை அள்ளிக் கொடுத்தார்.

வழக்கம் போல பெய்ன் கொடுத்த ஸ்டெயின்

வழக்கம் போல பெய்ன் கொடுத்த ஸ்டெயின்

சன்ரைசர்ஸ் அணியின் டேல்ஸ்டெயின் வழக்கம் போல கஞ்சத்தனமாக பந்து வீசினார். 4 ஓவர்களை வீசிய அவர் 23 ரன்களைக் கொடுத்தார். ஆனால் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

38 ரன்னில் ரிடையர் ஆன சச்சின்

38 ரன்னில் ரிடையர் ஆன சச்சின்

எப்படா டிரையர் ஆவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து வரும் சச்சின் டெண்டுல்கர் நேற்று 38 ரன்கள் எடுத்த நிலையில் இடது கையில் ஏர்பட்ட சிறிய காயம் காரணமாக ரிடையர்ட் ஹர்ட் ஆனார்.

ஹைதராபாத்துக்காக ஜொலித்த ஷிகார்

ஹைதராபாத்துக்காக ஜொலித்த ஷிகார்

ஹைதராபாத் அணியின் ஷிகார் தவான் சிறப்பாக ஆடி 59 ரன்களைக் குவித்தார்.

மிட்சல் மாயம் எடுபடவில்லை

மிட்சல் மாயம் எடுபடவில்லை

கடந்த சில போட்டிகளாக மிரட்டி வந்த மிட்சல் ஜான்சன், நேற்று தோல்வியடைந்தார். 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய அவர் 43 ரன்களைக் கொடுத்தார்.

Story first published: Tuesday, May 14, 2013, 11:40 [IST]
Other articles published on May 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+