ஐ..பி.எல். ஏலம்: 'விலை போகாத 'வீரர்கள்!

சிறந்த பேட்ஸ்மேன்களான ஆரோன் பிஞ்ச், உபுல் தாரங்கா, மார்ட்டின் குப்தில், டாரன் பிராவோ, கிப்ஸ், ஆதம்வோக்ஸ் ஆகியோர் விலை போகவில்லை. இதேபோல் மேத்யூ வாடே, டிம் பெய்ன், பிரியோர், குஷால் பெரோரா, குஷால் சில்வா, பிரசன்ன ஜெயவர்த்தனே ஆகியோரும் விலை போகவில்லை. டி காக், தினேஷ் ராம்டின், டேன் விலாஸ், தினேஷ் சந்திமால் உள்ளிட்டோரையும் ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை.
ஆல்ரவுண்டர்களான ரவி போபரா, டான் கிறிஸ்டியன் மற்றும் பந்து வீச்சாளர்களான போலிஞ்சர், ரியான் மெக்லாரன், வெர்னான் பிலேண்டர் ஆகியோரையும் எந்த அணியும் சீண்டவில்லை.
சுழற்பந்து வீச்சாளர்களான வீராசாமி பெருமாள். சூரஜ் ரந்தீவ், ஸ்டீபன் ஓ'கீஃப், பால் ஹாரிஸ், அகில தனஞ்செய, ரங்கன ஹேரத், சுலைமான் பென், ஆரோன் உள்ளிட்டோரையும் எவரும் ஏலம் எடுக்கவில்லை
Story first published: Sunday, February 3, 2013, 14:35 [IST]
Other articles published on Feb 3, 2013


Click it and Unblock the Notifications