Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவில் 'டக் அவுட் ஆன மாக்ஸ்வெல் சென்னையில் ரூ5.3 கோடிக்கு ஏலம்!!

Maxwell
சென்னை: நடப்பாண்டின் ஐ.பி.எல் சீசன் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் ரூ5.3 கோடிக்கு ஆஸ்திரேலியாவின் மாக்ஸ்வெல் விலைக்கு வாங்கப்பட்ட நேரத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் "டக்' அவுட் ஆகியிருந்தார் என்பது எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது!

ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களான ரிக்கி பாண்டிங், கிளார்க் போன்றோருக்குத்தான் இன்று நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் குறைந்த தொகைக்கே விலைபோயினர். இவர்களை மிஞ்சியிருக்கிறார் அந்த நாட்டு இளம் வீரர் மாக்ஸ்வெல். 24 வயதான மாக்ஸ்வெல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஆனாலும் அப்படி ஒன்றும் சோபித்தவர் கிடையாது.

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் போட்டிகளில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியவர் மாக்ஸ்வெல். மொத்தம் 6 இன்னிங்ஸில் 145 ரன்களை எடுத்திருந்க்கிறார்.

தற்போது மும்பை இந்திய அணியால் இத்தனை கோடிக்கு ஏன் வாங்கப்பட்டார் என்ற கேள்விக்கு, மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக அவர் உருவெடுப்பார் என்பதாலே அவர் மீது ஒரு கண் வைத்தோம் என்கிறார் அணியின் உரிமையா நீதா அம்பானி.

மும்பை அணியின் தலைமை வழிகாட்டியான அனில் கும்ப்ளே கூறுகையில், அவர் மிகச் சிறந்த வீரர். அவர் எங்கள் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா அணியில் கூட அண்மையில் இடம்பிடித்திருந்தார் மாக்ஸ்வெல். இவர் 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி இருக்கிறார்.

சரி இதெல்லாம் இருக்கட்டும்... இன்று அவர் ரூ.5.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு சம்பவம் நடந்தது. அதான் சுவாரசியத்தின் உச்சமே!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந் தேதி நடைபெற்ற போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி 35 பந்துகளில் 51 ரன்களைக் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் மாக்ஸ்வெல். அனேகமாக அதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஏனெனில் இன்றும் அவர் விளையாடினார். இன்றைய போட்டியைப் பார்த்திருந்தால் அனேகமாக விலை போகாதோர் பட்டியலுக்குக் கூட போயிருக்கலாம்.

இன்று அவர் விலை போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 2-வது இன்னிங்ஸ் ஆட களத்துக்கு வந்தார். ஆனால் 7வது வீரராக களம் இறங்கிய அவர் தாம் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சியில் உறைந்து கிடந்தார். அப்போதுதான் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ரூ5.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட செய்தி அவருக்குக் கிடைத்திருக்கிறது!

ரூ5.3 கோடிக்கு அவ்ளோ ஒர்த்தான்னு ஐ.பி.எல். போட்டிகளில் பார்த்துடலாம்!

Story first published: Sunday, February 3, 2013, 15:18 [IST]
Other articles published on Feb 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+