Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்புட்டுதாங்க... ஐபிஎல் முடிஞ்சு போச்சு.. இதுதான் கடைசி ஹைலைட்ஸ்!

கொல்கத்தா: சிங்கமாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அட்டகாசமான இறுதிப் போட்டியைப் பார்த்த திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கத் தவறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலி்ல சிறப்பாக பந்து வீசிய நிலையில், அடுத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அதை விட மகா சிறப்பாக பந்து வீசி நம்மை நிலைகுலைய வைத்து விட்டனர்.

எப்படியோ பழைய சாம்பியனே புது அவதாரம் எடுக்காமல், புது சாம்பியன் கிடைத்த திருப்தி கிரிக்கெட்டுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

சரி ஹைலைட்ஸ் பார்ப்போமா...!

மும்பைக்கு முதல் கோப்பை

மும்பைக்கு முதல் கோப்பை

இதுதான் மும்பை இந்தியன்ஸுக்கு முதல் கோப்பையாகும். இதனால் அந்த அணி வீரர்கள் பெரும் உற்சாகத்துடன் மைதானத்தை பலமுறை வலம் வந்து மகிழ்ந்தனர்.

மாணிக்கம்... பழிக்குப் பழி வாங்கிட்டேண்டா

மாணிக்கம்... பழிக்குப் பழி வாங்கிட்டேண்டா

கடந்த 2010ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் இதே சென்னை அணியிடம் தோல்வியைத் தழுவி பட்டத்தை பெறத் தவறியது மும்பை. தற்போது அதற்குப் பழிவாங்கி விட்டது. கிட்டத்தட்ட வில்லன் நம்பியார் ரேஞ்சுக்கு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சிரித்து மகிழ்ந்தது பார்க்கவே பயமாகத்தான் இருந்தது....

3 தோல்விகள்

3 தோல்விகள்

இந்தத் தோல்வியையும் சேர்த்து இதுவரை 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி தோல்வியைத் தழுவியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்கு முன்பு 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது சென்னை.

ஓப்பன் செய்த மலிங்கா

ஓப்பன் செய்த மலிங்கா

நேற்றைய இறுதிப் போட்டியில் வழக்கமாக முதல் ஓவரை வீசும் மிட்சல் ஜான்சன் பந்து வீசவில்லை. மாறாக மலிங்காவிடம் புதுப் பந்து கொடுக்கப்பட்டது. அவரும் 2 விக்கெட்களைச் சாய்த்து சென்னையை அதிர வைத்தார்.

மலிங்காவின் ஹாட்ரிக்கைத் தடுத்த பத்ரி

மலிங்காவின் ஹாட்ரிக்கைத் தடுத்த பத்ரி

முதலில் ஹஸ்ஸியையும், அடுத்து சுரேஷ் ரெய்னாவையும் அவுட்டாக்கினார் மலிங்கா. 3வது பந்தில் பத்ரிநாத்தை வீழ்த்தி ஹாட்ரிக் செய்ய நினைத்தார். ஆனால் அது முடியாமல் போனது.

எல்லோருக்கும் விக்கெட்

எல்லோருக்கும் விக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்காவுக்கு 2, ஜான்சனுக்கு 2, ஹர்பஜன் சிங்குக்கு 2 என விக்கெட்கள் கிடைத்தன.

6 ஓவர்களில் 4 விக்கெட் காலி

6 ஓவர்களில் 4 விக்கெட் காலி

சென்னை அணி விளையாடியபோது, 6 ஓவர்களிலிலேயே 4 விக்கெட்களைச் சாய்த்து பரிதாபமாக நின்றது சென்னை. அதுவே 7வது ஓவரில் 5 விக்கெட் போயிருந்தது. அது மேலும் மோசமாகி 38 ரன்களுக்கு 6 விக்கெட் என்று கேவலமாகிப் போனது.

நான்கு வாத்து முட்டை

நான்கு வாத்து முட்டை

சென்னை அணியின் ரெய்னா, பத்ரிநாத், ரவீந்திர ஜடேஜா, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்கள்.

கெய்லுடன் இணைந்த ஹஸ்ஸி

கெய்லுடன் இணைந்த ஹஸ்ஸி

நேற்றைய போட்டியின் முடிவில் ஹஸ்ஸி மொத்தம் 733 ரன்களைக் குவித்திருந்தார். இதன் மூலம் 2012ல் இதே அளவில் ரன்களைக் குவித்த கெய்லுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

2 தொப்பியும் சென்னைக்கே

2 தொப்பியும் சென்னைக்கே

அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சுத் தொப்பியும், அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பர்ப்பிள் தொப்பியும் சென்னைக்கே கிடைத்தது.

இறுதியிலும் விளையாடாத சச்சின்

இறுதியிலும் விளையாடாத சச்சின்

காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வந்த சச்சின், நேற்றைய இறுதிப் போட்டியிலும் விளையாடவில்லை.

அல்பி கொடுத்த சந்தோஷம்

அல்பி கொடுத்த சந்தோஷம்

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கின்போது 2வது ஓவரில் அல்பி மார்க்கில் வீசிய பந்துக்கு இரண்டு விக்கெட்கள் வீழ்ந்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியது.

4 ஓவர்களில் 3 விக்கெட் காலி

4 ஓவர்களில் 3 விக்கெட் காலி

3.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 16 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது மும்பை.

15 ஓவரில்தான் நூறு வந்தது

15 ஓவரில்தான் நூறு வந்தது

15வது ஓவரில்தான் மும்பை அணி தனது 100 ரன்களைத் தொட்டது. அப்போது அந்த அணி 4 விக்கெட்களை இழந்திருந்தது.

போலார்ட் வந்தார்.. எல்லாமா மாறியது

போலார்ட் வந்தார்.. எல்லாமா மாறியது

ஆனால் போலார்ட் ஆட வந்த பிறகு ஆட்டமே மாறிப் போனது. அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து விட்டார் போலார்ட். நேற்றைய போட்டியின் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார்.

Story first published: Monday, May 27, 2013, 13:27 [IST]
Other articles published on May 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+