பிப். 3ம் தேதி சென்னையில் ஐபிஎல் வீரர்கள் ஏலம்!

இதுகுறித்து ஐபிஎல் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் 2013ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்கு ஏலம் தொடங்கும். இதற்கு முந்தைய ஏலங்களை நடத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மாட்லி நிறுவனத்தினரே இந்த ஏலத்தையும் நடத்தவுள்ளனர்.
இந்த ஏலம் சோனி சிக்ஸ் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்த ஏலத்தில் புதிய டைட்டில் ஸ்பான்சராக பெப்சி சேர்ந்துள்ளது. மேலும், புதிய அணியாக சன் டிவி குழுமத்தின் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி இணைந்துள்ளது.
Story first published: Friday, January 25, 2013, 17:31 [IST]
Other articles published on Jan 25, 2013


Click it and Unblock the Notifications