Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோப்பையை வாங்க நீதா அம்பானி ஏன் வரலைன்னு தெரியுமா...?

கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அத்தனை ஐபிஎல் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்ட அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியை மும்பை இந்தியன்ஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது காண முடியவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரா முகேஷ் அம்பானியின் மனைவி நீதா, ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்கும் தவறாமல் வருவார். மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை ரசித்துப் பார்ப்பார்.

கடந்த காலங்களில் முகேஷ் அம்பானியும் போட்டிக்கு வருவார். ஆனால் இந்த முறை அவர் வரவில்லை. மாறாக அவரது மகன் தனது தாயுடன் வந்திருந்தார். இருவரும் விசேஷமான பெரிய சோபாவில் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து போட்டிகளை ரசித்துப் பார்த்தனர்.

ஷில்பா, ப்ரீத்திக்குப் போட்டியாக நீதா

ஷில்பா, ப்ரீத்திக்குப் போட்டியாக நீதா

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஷில்பா ஷெட்டி ஓனர். கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு ப்ரீத்தி ஜிந்தா இருக்கிறார். அந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸுக்கு வசீகரமான முகமாக நீதா இருந்து வருகிறார்.

புத்துணர்ச்சியுடன் ரசிப்பு

புத்துணர்ச்சியுடன் ரசிப்பு

மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிகளில் தவறாமல் ஆஜராகி விடும் அவர் ஒவ்வொரு போட்டியையும் ரசித்துப் பார்ப்பார்.

நடிகைகளுக்கு ஈடான பிரபலம்

நடிகைகளுக்கு ஈடான பிரபலம்

நடிகைகளுக்குத்தான் வழக்கமாக வசீகரமும், கவர்ச்சியும், பெரும் கூட்டமும் திரண்டு நிற்கும். ஆனால் அவர்களுக்கு நிகரான வசீகரத்துடன் காணப்படுபவர் நீதா அம்பானி.

இறுதிப் போட்டியில் மிஸ்ஸிங்

இறுதிப் போட்டியில் மிஸ்ஸிங்

ஒவ்வொரு போட்டிக்கும் தவறாமல் வரும் நீதா, இறுதிப் போட்டியன்று காணவில்லை. அவரது இளைய மகனான ஆனந்த் மட்டுமே வந்திருந்தார். இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. பல கேள்விகளையும் எழுப்பியது.

நியூயார்க்கில் கணவருடன் முகாம்

நியூயார்க்கில் கணவருடன் முகாம்

ஆனால் இறுதிப் போட்டியன்று தனது கணவருடன் நீதா நியூயார்க்கில் முகாமிட்டிருந்தாராம். அவரது மூத்த மகன் மற்றும் மகள் அங்கு படிக்கின்றனர். அன்றைய தினம் அவர்களுக்கு பட்டமளிப்பு விழாவாம். அதில் கலந்து கொள்வதற்காகவே முகேஷும், நீதாவும் அங்கு போய்விட்டனராம்.

பெரிய பார்ட்டி தர்றோம்...

பெரிய பார்ட்டி தர்றோம்...

இருப்பினும் அணி வீரர்களுக்கு மிகப் பெரிய பார்ட்டியைத் தரப் போவதாக நீதா உறுதியளித்துள்ளாராம். மும்பையில் இந்த பார்ட்டிக்கு அவர் ஏற்பாடு செய்யவுள்ளதாக தெரிகிறது. அதில் நீதா தனது குடும்பத்தோடு பங்கேற்பாராம்.

Story first published: Tuesday, May 28, 2013, 11:26 [IST]
Other articles published on May 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+