Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப்பிடம் வீழ்ந்தது டேர் டெவில் அணி

மொஹாலி: மொஹாலியில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. சேவாக் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல பெங்களூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மொஹாலியில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும் டெல்லி டேர் டெவில் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கில் இறங்கியது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. 6 ரன்களில் கேப்டன் சேவாக் ஆட்டமிழந்தார். கம்பீர் 18 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மனோஜ்திவாரி அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் கோயல்-சைமன் காடிச் ஜோடி இன்னிங்சை தொடங்கியது. விஆர்வி சிங் வீசிய பந்தில் கோயல் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார். சைமன் காடிச் நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.

75 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட் ஆனார். கேப்டன் யுவராஜூம் நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றித் தேடி தந்தனர். 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19.3 ஓவர்களில் 162 ரன்களை குவித்து .டெல்லி அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. விஆர்வி 3 விக்கெட்டுகளும், பதான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இது இந்த அணியில் 2வது வெற்றியாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி:

அதேபோல பெங்களூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

முதலில் ஆடிய பெங்களூர் அணியின் கேப்டன் திராவிட் ரன் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். டெய்லர் 20 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து இலக்கு நிர்ணயித்தது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிரேம் ஸ்மித் 42 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்களை விளாசினார். அடுத்து ஆடிய ஷேன் வாட்சன்61 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றித் தேடித் தந்தார். 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+