Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டுக்காக விரட்டியடிக்கப்பட்ட கால்பந்து.. கொல்கத்தாவில் ரசிகர்கள் குமுறல்

கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் செ டென்ஷனில் உள்ளனராம். ஐபிஎல் போட்டிகளுக்காக கால்பந்தையே விரட்டியடித்தால் அவர்களுக்குக் கோபம் வராதா என்ன....

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. நடப்புச் சாம்பியன் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் என்பதால் கொல்கத்தாவில் தொடக்க விழா நடைபெறவுள்ளது.

இந்த தொடக்க விழாவுக்காக தற்போது கால்பந்துக்கு ஆப்பு வைத்துள்ளனராம். இதுதான் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.

9 அணிகள்... அனல் பறக்கும் ஆட்டங்கள்

9 அணிகள்... அனல் பறக்கும் ஆட்டங்கள்

6வது ஐபிஎல் தொடரில் மொத்தம் 9 அணிகள் மோதவுள்ளன. புதிதாக ஹைதராபாத் சன் ரைசர்ஸ் இணைந்துள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் போய் விட்டது.

ஏப்ரல் 3 முதல் திருவிழா

ஏப்ரல் 3 முதல் திருவிழா

ஏப்ரல் 3ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. மே 26ம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

தொடக்க விழா கொல்கத்தாவில்

தொடக்க விழா கொல்கத்தாவில்

கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. இங்குதான் தற்போது சிக்கல் வந்துள்ளது.

ஸ்டேடியத்தைக் காலி செய்ய கால்பந்துக்கு உத்தரவு

ஸ்டேடியத்தைக் காலி செய்ய கால்பந்துக்கு உத்தரவு

இந்திய கால்பந்தின் முக்கிய கால்பந்துத் தொடர்பான ஐலீக் போட்டிகள் சால்ட் லேக் ஸ்டேடியத்தில்தான் நடைபெறுவதாக உள்ளது. ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக சால்ட்லேக் ஸ்டேடியத்தை கிரிக்கெட் வாரியம் எடுத்து விட்டதால் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு இந்தப் பக்கமே வரக் கூடாது என்று கால்ந்துப் போட்டித் தொடர் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

கால்பந்து ரசிகர்கள் டென்ஷன்

கால்பந்து ரசிகர்கள் டென்ஷன்

கிரிக்கெட் வாரியம் இப்படி அராஜகமாக கால்பந்துப் போட்டிகள் நடத்தக் கூடாது என்று கூறியிருப்பது திமிர் பிடித்த செயல் என்று கொல்கத்தா கால்பந்து ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்தும் அவர்கள் யோசித்து வருகிறார்களாம்.

கிரிக்கெட் - கால்பந்து வெறியர்கள்

கிரிக்கெட் - கால்பந்து வெறியர்கள்

கொல்கத்தா ரசிகர்கள் கால்பந்து வெறியர்கள் ஆவர். கால்பந்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்று கூறுவோர் பலர் இங்கு உண்டு. அப்படிப்பட்ட கொல்கத்தாவில் கால்பந்து ஆட்டத்தையே தடுத்து நிறுத்தும் அளவுக்கு ஐபிஎல் தொடர் வந்து சேர்ந்திருப்பது அங்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாம்.

பார்க்கலாம் என்ன மாதிரியான பஞ்சாயத்து வரப் போகிறதென்று...!

Story first published: Tuesday, March 5, 2013, 8:41 [IST]
Other articles published on Mar 5, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+