Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 500 கோடி கொடுங்க.. ஐபிஎல் ஓனர்களுக்கு சிவசேனா கோரிக்கை

Shiv Sena Logo
மும்பை: மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ரூ. 500 கோடி நிதியைக் கொடுக்க வேண்டும். இதை மாநில அரசு பெற்று மகாரஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரவணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.

இதுகுரித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராத் கூறுகையில், மகாராஷ்டிர பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஐபிஎல் உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும், அக்கறை காட்ட வேண்டும்.

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக தொழிலதிபர்களும், திரையுலகினரும்தான் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மும்பையில்தான் வாழ்கின்றனர். எனவே இவர்களுக்கு மகாராஷ்டிராவின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு உண்டு.

அடுத்த மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. அதில் கிடைக்கும் வருவாயிலிருந்து ரூ. 500 கோடியை மகாராஷ்டிர வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கொடுக்க ஐபிஎல் உரிமையாளர்கள் முன்வர வேண்டும்.

மராத்வாடா பகுதியில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. இதை தீர்க்க பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. அதேபோல கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை நிலவுகிறது. வடக்கு மகாராஷ்டிரா, மேற்கு மகாராஷ்டிராவிலும் தீவனப் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கெல்லாம் ஐபிஎல் உரிமையாளர்கள் உதவ வேண்டும்.

குறைந்தது 500 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. எனவே இதை ஐபிஎல் உரி்மையாளர்கள் தர வேண்டும் என்று கூறினார் ராத்.

Story first published: Monday, March 18, 2013, 10:49 [IST]
Other articles published on Mar 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+