ஐபிஎல் 6 ஏலம் டாலரில் கிடையாது, ரூபாயில்தான்!

நாணயமாற்று விகிதத்தில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த முடிவுக்கு வந்துள்ளதாம் கிரிக்கெட் வாரியம்.
இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தரப்பில் சிலர் கூறுகையில், ஐபிஎல் அணிகள் சிறந்த முறையில் தங்களது செலவுகளை மேற்கொள்ள இது உதவும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு கருதுகிறது. எனவேதான் இந்த மாற்றத்திற்கு முடிவு செய்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.
முதல் முதலில் 2008ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடந்தது. அது டாலரில் நடந்தது. இந்த நிலையில்தான் தற்போது முதல் முறையாக ரூபாய்க்கு மாறுகிறது கிரிக்கெட் வாரியம். இது 2014 முதல் அமலுக்கு வரும்.
Story first published: Thursday, December 27, 2012, 10:20 [IST]
Other articles published on Dec 27, 2012


Click it and Unblock the Notifications