அஞ்சலி 'அபூர்வ' விசிட். நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் சச்சின்?

நாக்பூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியைக் காண அஞ்சலி நாக்பூர் வந்துள்ளார். இது பல ஊகங்களைக் கிளப்பியுள்ளது. சச்சின் ஆட்டத்தை இதுவரை நேரில் வந்து பார்த்ததில்லை அஞ்சலி. அவர் சாதனை படைத்த போட்டிகளையும் கூட அவர் நேரில் வந்து பார்த்ததில்லை. ஆனால் தற்போது அவர் நாக்பூர் டெஸ்ட் போட்டியைக் காண வந்துள்ளார். இதை வைத்து சச்சின் தனது ஓய்வு முடிவை எடுத்து விட்டதாகவும், நாக்பூர் டெஸ்ட்டுடன் அவர் ஓய்வு பெறலாம் என்றும், இதனால்தான் அஞ்சலி இங்கு வந்திருப்பதாகவும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
ஆனால் சச்சின் ஓய்வு குறித்து இதுவரை கிரிக்கெட் வாரியமோ அல்லது சச்சின் தரப்போ எந்தத் தகவலையும் வெளியிடாமலேயே உள்ளது. ஆனால் அஞ்சலியின் வருகைக்கும், சச்சின் ஓய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சச்சினுக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது.
என்ன நடக்கப் போகுதோ பார்க்கலாம்...
Story first published: Monday, December 17, 2012, 13:20 [IST]
Other articles published on Dec 17, 2012


Click it and Unblock the Notifications