For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காலிஸ் 132, டிவில்லியர்ஸ் 217: தெ.ஆப் 494/7

By Staff

அகமதாபாத்: அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 2 நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 494 ரன்களை குவித்தது. காலிஸ் சதம், டிவில்லியர்ஸ் இரட்டை சதம் அடித்தனர்.

அகமதாபாத்தில் இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்.ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. 5வது ஜோடிக்கு ஜாக் காலிஸ், டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளான இன்று ஆட்டம் துவங்கியதில் இருந்து இந்திய வீரர்களின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்க ஜோடி நாலாபுறமும் துரத்தியடித்தனர்.

மதிய உணவு இடைவேளையின்போது டிவில்லியர்ஸ் 102 ரன்களுடனும், காலிஸ் 97 ரன்களுடனும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். டிவில்லியர்ஸ் 174 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகள், 1 ஐந்து ரன்களுடன் தனது சதத்தை எட்டினார். இது அவரது 5வது சதமாகும்.

உணவு இடைவேளைக்கு பிறகு காலிஸ் சதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்த வீரர்கள் வரிசையில் டான் பிராட்மென் சாதனையை காலிஸ் முறியடித்தார். 275 பந்துகளில் 132 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரீசாந்த் வீசிய பந்தில் காலிஸ் கிளீன் போல்டு ஆனார்.

6வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸுடன் ஜோடி சேர்நத பவுச்சர் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். கும்ப்ளே வீசிய பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆனார்.

அடுத்து வந்த மோர்கெல் 1 ரன்னில் அவுட்டானார். அவரை ஹர்பஜன் எல்பிடபிள்யூ செய்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா ஸ்கோர் 452. இந்த நிலையில் 318 பந்துகளை சந்தித்து டிவில்லியர்ஸ் 200 ரன்களை கடந்தார். இதில் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும்.

2வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 142.1 ஓவரில் 494 ரன்களை குவித்தது. 8வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் 217 ரன்களுடனும் ஹாரிஸ் 9 ரன்களுடன் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+