Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை பாருங்கப்பா, என்னமா ஆடுறாரு... சிலாகிக்கும் மியான்தத்

கராச்சி: கடின உழைப்பு, சிரத்தையான ஆட்டம், விடா முயற்சி போன்றவற்றுக்கு சிறந்த உதாரணம் சச்சின்தான். அவரைப் பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மியான்தத் கூறியுள்ளார்.

சச்சின் விளையாடாவிட்டால் அத்தனை பேரும் பாய்ந்தெடுத்து விமர்சிக்கின்றனர். அவர் ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக ஆடி விட்டால் சின்னக் கவுண்டர் விஜயகாந்த் ரேஞ்சுக்கு ஏற்றி வைத்து பேச ஆரம்பித்து விடுகின்றனர்.

அந்த வகையில்,நேற்று ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய சச்சினை பலரும் புகழ ஆரம்பித்துள்ளனர். இதே வாய்கள்தான், சச்சின் நடப்பு ஐபிஎல்லில் சரியாக ஆடவில்லை என்று விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மியான்தத் சச்சினை உதாரணம் காட்டி பாகிஸ்தான் வீரர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

கருத்தாக ஆடுவதற்கு - சச்சின்

கருத்தாக ஆடுவதற்கு - சச்சின்

ஒரு விஷயத்தை உறுதியாக எடுத்துக் கொண்டு செயல்படுவது, அதில் கருத்தாக இருந்து ஆடுவது ஆகியவற்றுக்கு சச்சின்தான் சரியான உதாரணம்.

சச்சினுக்கு நிகர் சச்சின்தான்

சச்சினுக்கு நிகர் சச்சின்தான்

சச்சினுக்கு நிகர் சச்சின்தான். அதி்ல சந்தேகம் இல்லை. கடின உழைப்புக்கு அவரைத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

சச்சின் என் காலத்தில் ஆடியது பாக்கியம்

சச்சின் என் காலத்தில் ஆடியது பாக்கியம்

நான் கிரிக்கெட் ஆடியபோது சச்சினும் விளையாடியது அருமையானது, என் பாக்கியம் அது. இப்படிப்பட்ட வீரர்களுடன் ஆடும்போது நிறைய கற்றுக் கொள்ளலாம்.

இன்னும் ஆடுறாரே...

இன்னும் ஆடுறாரே...

அப்போது முதல் இன்று வரை சச்சின் ஆடி வருகிறார். அது மிகப் பெரிய விஷயம். சச்சினைப் பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

இவர்தான் ரோல் மாடல்

இவர்தான் ரோல் மாடல்

சச்சின்தான் இன்றைய இளம் வீரர்களுக்கு சரியான ரோல் மாட்ல. அவரது சாதனைகள், பேட்டிங் திறமை ... எல்லாமே அருமையானது.

கோடு போட்டு வாழ்பவர் சச்சின்

கோடு போட்டு வாழ்பவர் சச்சின்

சச்சின் ஒரு பிரின்சிபலோடு வாழ்பவர்.. அதுதான் அவரது வெற்றிக்குக் காரணம். அதை அனைவரும் பின்பற்றலாம்.. என்றார் மியான்தத்.

Story first published: Wednesday, May 8, 2013, 13:47 [IST]
Other articles published on May 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+