Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளைக் வாரிக் குவித்ததிலும் சச்சின்தான் நம்பர் ஒன்!

Sachin
மும்பை: உலக அளவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவிலான ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றதிலும் சச்சின் உலக சாதனை படைத்தவர் ஆவார்.

சச்சின் என்றால் சாதனைகள்தான் நினைவுக்கு வரும். எதில் அவர் சாதனை படைக்கவில்லை என்ற கேள்வியும் கூட வரும். அந்த அளவுக்கு தொட்டதெல்லாம் சாதனையாகத்தான் இருக்கிறதுசச்சின் விவகாரத்தில்.

ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்றதிலும் உலக சாதனை படைத்துள்ளார்.

இத்தனை கால தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் மொத்தம் 16 முறை தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இது ஒரு உலக சாதனையாகும்.

இதில் 2003 உலகக் கோப்பைப் போட்டியும் அடக்கம். அப்போட்டியில் மொத்தம் 673 ரன்களைக் குவித்திருந்தார் சச்சின். அதில் ஒரு சதம்,6 அரை சதம் அடக்கம்.

இதேபோல 62 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று உலக சாதனை படைத்துள்ளார் சச்சின்தான். எந்த ஒரு வீரரும் இத்தனை முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 8 முறை இறுதிப் போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். உலககக் கோப்பைப் போட்டிகளில் 9 முறை வென்றுள்ளார். இந்தியா தோற்ற 6 போட்டிகளிலும் சச்சினுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.

Story first published: Sunday, December 23, 2012, 13:31 [IST]
Other articles published on Dec 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+