மேற்கு இந்தியத் தீவுகளை புரட்டிப் போட்ட வங்கதேசம் - 3வது போட்டியிலும் வெற்றி

ஆல் ரவுண்டர் மகமதுல்லா 51 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த வங்கதேச அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகளி்ல ஆடியது. இதில் இரண்டிலும் வென்று தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
பின்னர் ஒரு நாள் போட்டிகள் தொடங்கின. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றி மேலும் ஒரு சாதனையைப் படைத்தது.
இந்த நிலையில் பாசதீரேவில் நடந்த 3வது போட்டியிலும் வென்று பெரும் சாதனை படைத்து விட்டது. ஒரே நேரத்தில் வங்கதேச அணி இப்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை அமோகமாக கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
இப்போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டு விட்டது.
ஆல் ரவுண்டர் மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தும், 2 விக்கெட்களை வீழ்த்தியும் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
ஆட்ட நாயகனாக மகமதுல்லாவும், தொடர் நாயகனாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் தேர்வு செய்யப்பட்டனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications