Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்துவீச்சில் தன்வீர், பேட்டிங்கில் மார்ஷ் முதலிடம்

மும்பை: ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் பந்து வீச்சில் ராஜஸ்தான் அணியின் சொஹைல் தன்வீரும், பேட்டிங்கில் பஞ்சாப் அணியின் மார்ஷும் முதலிடம் பிடித்துள்ளனர். அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் மும்பையின் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார்.

பந்து வீச்சில் முதலிடம் பிடித்தவர்கள்:

சொஹைல் தன்வீர் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 22.
ஷான் வார்னே - ராஜஸ்தான் ராயல்ஸ் - 19.
ஸ்ரீசாந்த் - பஞ்சாப் - 19.
ஷேன் வாட்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 17.
பியூஷ் சாவ்லா - பஞ்சாப் - 17.
அல்பி மார்க்கல் - சென்னை - 17.
கோனி - சென்னை - 17.
யோ மகேஷ் - டெல்லி - 16.
மெஹரூப் - டெல்லி - 15.
இர்பான் பதான் - பஞ்சாப் - 15.

பேட்டிங்கில் முதலிடம் பிடித்தவர்கள்:

மார்ஷ் - பஞ்சாப் - 616 (68.44)
கெளதம் காம்பீர் - டெல்லி - 534 (41.07)
ஜெயசூர்யா - மும்பை - 514 (42.83)
ஷேன் வாட்சன் - ராஜஸ்தான் - 472 (47.20)
ஸ்மித் - ராஜஸ்தான் - 441 (49.00)
கில்கிறைஸ்ட் - டெக்கான் சார்ஜர்ஸ் - 436 (33.53)
யூசுப் பதான் - ராஜஸ்தான் - 435 (31.07)
சுரேஷ் ரெய்னா - சென்னை - 421 (38.27)
டோனி - சென்னை - 414 (41.40)
வீரேந்திர ஷேவாக் - டெல்லி - 406 (33.83)

அதிக சிக்சர்கள் விளாசியவர் - ஜெயசூர்யா - மும்பை - 31.

ஹாட்ரிக் சாதனை படைத்தவர்கள்:

எல்.பாலாஜி (சென்னை), மக்காயா டினி (சென்னை), அமித் மிஸ்ரா (டெல்லி).

அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி:

சென்னை. பஞ்சாபுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள்.

குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்த அணி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மும்பைக்கு எதிராக 67 ரன்கள்.

சதம் போட்ட வீரர்கள்:

மெக்கல்லம் - கொல்கத்தா - 158.
சைமண்ட்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் - 117.
மைக் ஹூசே - சென்னை - 116.
மார்ஷ் - பஞ்சாப் - 115.
ஜெயசூர்யா - மும்பை - 114.
கில்கிறைஸ்ட் - டெககான் சார்ஜர்ஸ் - 109.

கில்கிறைஸ்ட் - வி.வி.எஸ்.லட்சுமண் இணை சேர்த்த 155 ரன்கள்தான் முதல் விக்கெட் ஜோடிக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். வேறு எந்த ஜோடியும் இந்த இலக்கைத் தாண்டவில்லை.

ஐபிஎல் தொடரின் பேட்டிங், பந்து வீச்சு, அதிக சிக்சர்கள் விளாசியது ஆகியவற்றில் இந்தியாவைச் சேர்ந்த யாரும் முதலிடத்தைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தொடர் நாயகன் விருதும் இந்திய வீரர் ஒருவருக்குக் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல, இந்திய கிரிக்கெட்டின் மும்மூர்த்திகளான கங்குலி, சச்சின், டிராவிட் ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடிக்கவில்லை.

Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+