கபிலுக்குப் பிடித்த 12 வீரர்கள்... ஆனால் அவருக்கே அணியில் இடமில்லை..!
நொய்டா: கபில் தேவ் தனது கனவு கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளார். அதில் அவரது தலைமையில் உலகக் கோப்பையை முதல் முறையாக இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த எந்த வீரரும் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
அதேசமயம், டோணி, சச்சின், கங்குலி, விராத் கோஹ்லி, அஸாருதீன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் இடம் பிடித்துள்ளனர்.
டோணிதான் கபிலின் கனவு அணியின் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார். கபிலே சொல்லி விட்டதால் டோணிதான் பெஸ்ட் கேப்டன் என்பதை மீண்டும் விவாதிக்கத் தேவையில்லாமல் போயுள்ளது.
என்ன காமெடி என்றால் இந்த அணியில் தனக்கே இடம் தரவில்லை கபில் தேவ் என்பதுதான். கபிலின் கனவு அணியைப் பார்ப்போம்.....

கேப்டன் டோணிதான்
12 பேர் கொண்டஇந்த கபிலின் கனவு அணியில் கேப்டனாக டோணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜடேஜாவுக்கு இடம்.. இவர் ரவீந்திர ஜடேஜா
அதேபோல இந்திய அணியின் முக்கிய வீரராக திகழும் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கொடுத்துள்ளார் கபில்.

கும்ப்ளே - ஹர்பஜன் சிங்
சுழற்பந்து வீச்சாளர்கள்

வந்துட்டாருய்யா...சச்சின்
இவர்கள் தவிர சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், செளரவ் கங்குலி, விராத் கோஹ்லி, முகம்மது அஸாருதீன், ஜாகிர்கான், ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

83 அணியிலிருந்து ஒருத்தரும் இல்லை...
1983ம் ஆண்டு தனது தலைமையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை புரட்டியெடுத்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை கபில்.

ஏன் அப்படி கபில்பாஜி...
இதுகுறித்துக் கபில் கூறுகையில், இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த ஒரு நாள் அணி. நான் சொல்வதை பலர் ஏற்காமல் போகலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இதுதான் பெஸ்ட் அணி.

நானே எப்படி என்னைச் சேர்ப்பது...
இது நான் தேர்வு செய்த அணி. அதில் போய் என்னையே எப்படி நான் சேர்க்க முடியும்..

நாங்கள் வென்றோமென்றால்...
அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை மிகப் பலம் வாய்ந்தது. அதை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆடினோம், வென்றோம். மேலும் அந்த நாள் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. எனவே வெல்ல முடிந்தது, அவ்வளவுதான்.

டோணி சாதனையாளர்
டோணி உண்மையிலேயே சாதனையாளர். அவர் வெல்லாத கோப்பையில்லை. உலகக் கோப்பையை அவர் தலைமையில் வென்ற விதம் அலாதியானது. சாம்பியன்ஸ் டிராபியை அவர் வென்ற விதம் சிறப்பானது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரது தலைமையிலான அணிதான் மிகச் சிறப்பானது என்பதில் சந்தேகம் இல்லை.

யார் இல்லாவிட்டாலும் வெல்கிறார்களே...
ஷேவாக் இல்லை, கம்பீர் இல்லை, ஜாகிர் கான் இல்லை.. ஆனாலும் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா சிறப்பாக வென்றது. மேற்கு இந்தியத் தீவுகளைப் பாருங்கள்.. ரிச்சர்ட்ஸ், ஹெய்ன்ஸுக்கு இணையானவர்கள் இதுவரை வரவில்லை...

பீல்டிங்கிலும் பிரமாதம்
இந்திய அணி தற்போது பீல்டிங்கிலும் கலக்குகிறார்கள். உலகத் தரம் வாய்ந்த பீல்டர்கள் இந்த அணியில் உள்ளனர்.

தவான் அருமை...
ஷிகர் தவான் அருமையாக ஆடுகிறார். ஷேவாக்கைப் போலவே போராளியாக இருக்கிறார். அவரது முதல் ஆட்டமே அவுட்ஸ்டாண்டிங்காக இருந்தது. ஷேவாக்கை விட பிரமாதமாக ஆடுகிறார் என்று கூட கூறலாம் என்று பாராட்டினார் கபில்.

இதுதான் கபில் அணி...
கேப்டன் டோணி, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ஷேவாக், அஸாருதீன், யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத், ஜாகிர் கான், 12வது வீரர் ரவீந்திர ஜடேஜா.


Click it and Unblock the Notifications