Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெப்படி மீடியாவில் பேசலாம்? புஜரா, ரோகித் ஷர்மாவுக்கு கிரிக்கெட் வாரியம் வார்னிங்!

Pujara and Rohit sharma
மும்பை: ஊடகங்களில் பேட்டியளித்ததற்காக கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது.

அண்மையில் முத்தரப்பு தொடரில் தொடக்க வீரராக விளையாடியது தொடர்பாக ரோகித் ஷர்மா ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். இதேபோல் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியில் இடம் கிடைத்தது தொடர்பாக புஜாராவும் பேட்டியளித்திருந்தார்.

குறிப்பிட்ட ஒரு தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், அந்த தொடர் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்பும் எந்த காரணத்தை கொண்டும் மீடியாக்களிடம் பேசக் கூடாது என்பதுதான் வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்துக்குமான ஒப்பந்த விதி. ஆனால் அதை மீறி இருவரும் செயல்பட்டனர் என்பதுதான் புகார்.

மேலும் தொடர் முடிந்ததும் உடனடியாக மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று அவர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டனர். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த விதிமுறைகள் அவர்களுக்கு சுட்டிக்காட்டி, அதற்குட்பட்டு நடக்கும்படி கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அறிவுறுத்தினார் என்கின்றனர் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்.

ஆனால் மீடியாக்களிடம் பேச தடை விதிக்கும் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கை நியாயமற்றது என்கின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கீர்த்தி ஆசாத், சந்து போர்டு.

Story first published: Saturday, July 20, 2013, 17:44 [IST]
Other articles published on Jul 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+