For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை-பஞ்சாபை வென்றது பெங்களூர்

By Staff

டர்பன்:ஐபிஎல் டுவென்டி-20 தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில் கும்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி பஞ்சாபை தோற்கடித்தது.

ஐபிஎல் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு ஜெயசூர்யா 6 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மூன்றாவது வீரராக வந்த ஹர்பஜனும் சொதப்பினார். அவரும் 6 ரன்களுக்கு அவுட்டானார்.

மறுமுனையில் சூப்பராக பேட் செய்த சச்சின், அகார்கர் பந்தில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். மீண்டும் ஒரு பவுண்டரிக்கு ஆசைப்பட்ட சச்சின், மெக்கலத்தால் கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார். அவர் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 30 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.

டுமினி அபாரம்...

அடுத்து வந்த டுமினி 4 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 37 பந்தில் 52 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவரி்ல் 6 விக்கெட் இழப்பபுக்கு 148 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட் செய்த கொல்கத்தா அணிக்கு ஜாகிர் கான் அதிர்ச்சி அளித்தார். அவர் துவக்க வீரர் கங்குலி (0), கெய்லை (7) போல்டாக்கி மிரட்டினார். அடுத்து வந்த ஹாட்ஜ் மும்பை அணிக்கு கடும் சவால் கொடுத்தார். அவர் 60 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். வான் வைக் 32 ரன்கள் சேர்த்தார்.

மற்ற வீரர்கள் விரைவில் வெளியேற, கொல்கத்தா அணி 20 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 9 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

கும்ளே தலைமையில் பெங்களூர் வெற்றி...

மற்றொரு போட்டியில் கும்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, யுவராஜை கேப்டனாக கொண்ட பஞ்சாப் அணியை சந்திதத்து.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி டிராவிட், பீட்டர்சன் உள்ளிட்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது. அந்த அணியின் எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. அதிகபட்சமாக வான்டர் மெர்வி 35, காலிஸ் 27 ரன்கள் எடுத்தனர்.

உத்தப்பா 19, விராத் கோஹ்லி 16 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியின் யுவராஜ் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அடுத்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு யுவராஜ் சிங் சூப்பர் துவக்கம் தந்தார். பந்து வீச்சைப் போலவே பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடினார்.

அதிரடி பேட்டிங்கால் பெங்களூர் பவுலர்களை உண்டு இல்லை என செய்தார் யுவராஜ் சிங். 4 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 34 பந்தில் 50 ரன்கள் எடுத்த அவரை கும்ளே பெவிலியனுக்கு அனுப்ப வைத்தார். இதையடுத்து ஆட்டம் மெல்ல பெங்களூர் பக்கம் சாய்ந்தது.

சங்ககரா 17, ஜெயவர்த்தனே 19 ரன்களுக்கு அவுட்டானார்கள். இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:25 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+