Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ.கே. சாம்பியன்ஸ் லீக் போட்டி வந்தாச்சு.. முதல் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் மோதல்

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

6வது ஐபிஎல் தொடரின் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 3வது இடத்தைப் பிடித்த அணியாகும்.

இந்த இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் சந்திக்கவுள்ளன.

ஜெய்ப்பூரில் முதல் போட்டி

ஜெய்ப்பூரில் முதல் போட்டி

ஜெய்ப்பூரில் செப்டம்பர் 21ம் தேதி முதல் போட்டி நடைபெறுகிறது. அங்குள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் மும்பையும், ராஜஸ்தானும் சந்திக்கவுள்ளன.

அக்டோபர் 6ம் தேதி பைனல்

அக்டோபர் 6ம் தேதி பைனல்

அக்டோபர் 6ம் தேதி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

5ம் தேதி 2வது அரை இறுதி...

5ம் தேதி 2வது அரை இறுதி...

அதேபோல அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியையும் டெல்லியே நடத்தவுள்ளது.

முதல் அரை இறுதி ஜெய்ப்பூரில்

முதல் அரை இறுதி ஜெய்ப்பூரில்

முதல் அரை இறுதிப் போட்டி அக்டோபர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும்.

யார் யார்...?

யார் யார்...?

இந்தத் தொடரில் பிரிஸ்பேன் ஹீட், டிரினிடாட் டொபாகோ, சென்னை சூப்பர் கிங்ஸ், டைட்டன்ஸ், ஒடாகோ வோல்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தின்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பைசலாபாத் உல்ப்ஸ் , ஹைவெல்ட் லயன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகியவை பங்கேற்கின்றன.

Story first published: Wednesday, July 24, 2013, 10:30 [IST]
Other articles published on Jul 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+