For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்: டெல்லி போலீஸ் விசாரணை வளையத்தில் பஞ்சாப் அணியின் 8 வீரர்கள்!

By Mathi

டெல்லி: நாட்டை அதிரவைக்கும் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் ராஜஸ்தான் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் 8 வீரர்களும் சிக்க இருக்கின்றனர். இந்த 8 வீரர்களும் தற்போது டெல்லி போலீசாரின் விசாரணை வளையத்தில் இருக்கின்றனர்.

ஐபிஎல் பிக்ஸிங் புயலானது ஸ்ரீசாந்த் தொடங்கி குருநாத் மெய்யப்பன் வரை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்தப் புயல் தற்போது சண்டிகாரில் மையம் கொண்டிருக்கிறது.

Now, Delhi police go after eight Kings XI Punjab players

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் கடந்த 9-ந் தேதி போட்டி நடைபெற்றது. இதற்காக இரு அணி வீரர்களும் 8-ந்தேதி இரவு சண்டிகாரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். அன்றிரவு பஞ்சாப் அணி வீரர் ஒருவர் ஹோட்டலில் விருந்து கொடுத்திருக்கிறார். நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய விருந்து அதிகாலை 3 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள் 8 பேர் மற்றும் ஸ்ரீசாந்தின் நெருங்கிய நண்பரும், முக்கிய தரகருமான ஜிஜுவும் கலந்து கொண்டிருக்கின்றனர். மறுநாள் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தோற்றது.

ஜிஜூ கலந்து கொண்ட விருந்தைத் தொடர்ந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததால் பிக்ஸிங் காரணமாக இருக்கலாமோ என்று டெல்லி போலீசார் சந்தேகித்தனர். புக்கிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டும் உள்ளது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் 8 வீரர்களுக்கு ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை உறுதி செய்வதற்காக டெல்லி போலீசார் சண்டிகார் சென்றுள்ளனர். சர்ச்சைக்குரிய விருந்து நடைபெற்ற ஹோட்டல் நிர்வாகத்திடம் வீடியோ காட்சிகளை கேட்டுள்ளனர். மேலும் ஹோட்டல் காமிராவில் 8,9 ஆகிய நாட்களில் பதிவான வீடியோ காட்சிகளும் கேட்கப்பட்டுள்ளன.

Story first published: Saturday, May 25, 2013, 15:08 [IST]
Other articles published on May 25, 2013
English summary
After Rajasthan Royals and the owner of Chennai Super Kings, now eight players of Kings XI Punjab are under the scanner of the Delhi Police special cell for alleged spot-fixing in the IPL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+