Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாபை வென்ற ராஜஸ்தான்-கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி

டர்பன்: பஞ்சாப் அணிக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் கம்பீரின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க டெல்லி டேர் டெவில்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றது.

ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் யுவராஜ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தானுக்கு துவக்க வீரர்களாக வந்த ஸ்மித், நமன் ஒஜா ஜோடி மிரட்டல் துவக்கம் தந்தது. எப்படி பந்து போட்டாலும் பவுண்டரிக்கு விளாசிய் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்து அசத்தியது.

இந்நிலையில் ஸ்மித் 1 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 44 பந்தில் 77 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் வெகு நேரம் நீடிக்கவில்லை. அவர் 12 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையி்ல் சூப்பராக பேட் செய்த நமன் ஒஜா 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 51 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவர்களில் பேட் செய்த ரவிந்திர ஜடேஜா 1 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 12 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட் செய்த பஞ்சாப் வீரர்கள் பொறுப்பில்லாமல் பேட் செய்து வரிசையாக அவுட்டானார்கள். சங்ககரா 11, ஜெயவரத்தனா 9 ரன்கள் எடுத்தனர். யுவராஜ் சிங் 3 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 37 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கேப்டன் கம்பீர் கலக்கல்-டெல்லி முதலிடம்...

மற்றொரு போட்டியில் சூப்பர் பார்மில் இருக்கும் டெல்லி டேர் டெவில்ஸ், தற்போதைய தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஷேவாக் காயம் காரணமாக விளையாடாததை அடுத்து இப்போட்டியிலும் டெல்லி அணிக்கு கம்பீர் கேப்டனாக செயல்பட்டார்.

டாஸ் வென்று கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக வந்த மெக்கலம், வான் வைக் நல்ல துவக்கம் தந்தனர். மெக்கலம் 35 ரன்கள் எடு்த்தார். ஹாட்ஜ் 10 ரன்களுக்கு அவுட்டானார்.

சிறப்பாக விளையாடிய வான் வைக் 48 பந்தில் 74 ரன்கள் எடுத்து நெஹ்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். ஹென்ரிக்ஸ் 24 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட் செய்த டெல்லி அணிக்கு கம்பீர், வார்னர் ஜோடி வெற்றி துவக்கம் தந்தது. வார்னர் 36 ரன்களுக்கு அகார்கர் பந்தில் அவுட்டானார். அசத்தலாக பேட் செய்த கம்பீர் அரைசதம் கடந்தார். கம்பீர் 57 பந்தில் 71, தில்ஷன் 34 பந்தில் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி அணி 19 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் டெல்லி அணி முதலிடம் பிடித்தது. கொல்கத்தா 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+