Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் புயலை நெருங்கும் ஐபிஎல் பிக்ஸிங் புயல்

பெங்களூர்: நாட்டை உலுக்கி எடுத்து வரும் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலாக வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பெயரும் அடிபடுகிறது.

பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிறைக்குப் போனார்கள். பிறகு நாட்டின் பல நகரங்களிலும் பல புக்கிகள் தொடர்ந்தும் சிக்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் வின்துவும் சிக்கப் போய் இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சிறைக்குப் போயிருக்கிறார். அத்துடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் 8 வீரர்கள் சிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

RCB cricketer Chris Gayle too involved in IPL fixing: Report

இந்த நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் பெயரும் பிக்ஸிங் விவகாரத்தில் அடிபடுகிறது. புக்கிகளான பவன் மற்றும் சஞ்சய் ஆகியோரிடம் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கெய்ல் பரிசாக பெற்றதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் ஸ்ரீசாந்த் அறையில் கெய்ல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கெய்ல்க்கு கொடுக்கப்பட்ட தங்க நகைகளுக்கு ஸ்ரீசாந்தின் நண்பர் ஜிஜுதான் பணம் கொடுத்துள்ளார். ஜிஜுவும் இப்போது சிறையில் இருக்கிறார். பவனும் சஞ்சய்யும் தலைமறைவாகிவிட்டனர். இது எந்த மேட்ச்சுக்கான பிக்ஸிங் என்பது தெரியவில்லை...

ஆகா..பிக்ஸிங் புயல் பெங்களூர் புயலை நெருங்கிவிட்டதோ?

Story first published: Saturday, May 25, 2013, 14:44 [IST]
Other articles published on May 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+