பெங்களூருக்கு கை மாறினார் சென்னை வீரர் அபினவ் முகுந்த்

இதுகுறித்த அறிவிப்பை பெங்களூர் அணி இன்று வெளியிட்டது. முகுந்த் ஏற்கனவே கடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். முதல் முறையாக அவர் அணி மாறி பெங்களூருக்கு வருகிறார்.
23 வயதான இடது கை தொடக்க ஆட்டக்காரரான முகுந்த், இந்தியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியவர் ஆவார்.இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
இதுவரை 15 டுவென்டி 20 போட்டிகளில் ஆடியுள்ள முகுந்த் 235 ரன்களை எடுத்துள்ளார்.
Story first published: Friday, January 25, 2013, 17:47 [IST]
Other articles published on Jan 25, 2013


Click it and Unblock the Notifications