Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின்-காம்ப்ளியின் 25 வருட கால சாதனை குறித்த ஆவணத்தை தீயில் எரித்த கொடுமை!

மும்பை: சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் சின்னப் பசங்களாக இருந்தபோது படைத்த ஒரு கிரிக்கெட் சாதனை குறித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆவணத்தை மும்பை பள்ளிகள் விளையாட்டு சங்கம் தீயில் போட்டு எரித்துள்ள செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளிக்கூட சிறார்களாக இருந்தபோது வகுப்புத் தோழர்களாக இருந்தவர்கள் சச்சினும், காம்ப்ளியும். அப்போது அவர்கள் படைத்த சாதனை குறித்த ஆவணம்தான் இது.

அந்த சாதனை குறித்த ஆவணம் மும்பை பள்ளிகள் விளையாட்டு சங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுதான் தற்போது தீயில் எரிக்கப்பட்டுள்ளது. சங்க அலுவலகத்தில் இதை வைக்க இடம் இல்லாததால் தீயில் போட்டு எரித்து விட்டனராம்.

1988ல் நிகழ்ந்த சாதனை

1988ல் நிகழ்ந்த சாதனை

1988ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த சாதனையைப் படைத்தனர் சச்சினும், காம்ப்ளியும். இருவரும் சாரதாஷ்டிரம் வித்யா மந்திர் பள்ளியில் அப்போது படித்து வந்தனர். அந்தப் பள்ளியின் கிரிக்கெட் அணி, அன்றைய தினம், செயின்ட் சேவியர் பள்ளியுடன் நடந்த போட்டியில் மோதியது.

664 ரன்கள் பார்ட்னர்ஷிப்

664 ரன்கள் பார்ட்னர்ஷிப்

சச்சினும், காம்ப்ளியும் இணைந்து செயின்ட் சேவியர் பள்ளியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி ரன் மழை பொழிந்தனர். இருவரும் சேர்ந்து அபாரமாகஆடி 664 ரன்களைக் குவித்தனர்.

வரலாற்றுச் சாதனை

வரலாற்றுச் சாதனை

இந்தியாவில் இப்படி ஒரு ரன் குவிப்பை அதற்கு முன்பு யாரும் செய்ததில்லை. அதற்குப் பிறகும் கூட 2007 வரைக்கும் இந்த சாதனையை யாரும் தொட்டதில்லை. மேலும் இது உலக சாதனையாகவும் மாறியது.

ஒரிஜினல் ஸ்கோர் ஷீட்

ஒரிஜினல் ஸ்கோர் ஷீட்

அந்தப் போட்டியின்போது பயன்படுத்தப்பட்ட ஸ்கோர் ஷீட் - அதாவது ரன்கள் எடுத்தது குறித்த புள்ளிவிவர தாள் - இதுநாள் வரை மும்பை பள்ளிகள் விளையாட்டு சங்கம் பத்திரமாக வைத்திருந்தது. தற்போது அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆவணத்தைத்தான் அது தீயில் போட்டு எரித்துள்ளது.

இடமில்லாததால் எரித்து விட்டோம்...

இடமில்லாததால் எரித்து விட்டோம்...

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் போர் கூறுகையில், எல்லாப் போட்டிகளிலும் ஸ்கோர் ஷீட் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலத்தான் இதுவும். மேலும் சங்க அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனவேதான் பழைய தாள்களைப் போட்டு எரித்து விட்டோம். அதில் இந்த ஸ்கோர் ஷீட்டும் ஒன்று என்றார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

சாதாரண பேப்பரைப் போல ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ப்பு வாய்ந்த ஆவணத்தை விளையாட்டு சங்கம் எரித்துள்ளதால் சச்சின் ரசிகர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். சச்சினுக்குமே கூட இது பெரும் ஏமாற்றமாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லை...

கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லை...

ஆனால் தீ வைத்து எரித்தது குறித்து சங்கத்திற்கு கொஞ்சம் கூட சலனமே இல்லை. இதுகுறித்து போர் கூறுகையில், 25 வருட பழைய ஆவணங்கள் அவை. அதை எத்தனை காலத்துக்குத்தான் பத்திரமாக வைத்திருக்க முடியும். அதுதான் கொளுத்தி விட்டோ்ம் என்று கூறுகிறார்.

பிரேம் போட்டிருக்கலாமே போரு....??

பிரேம் போட்டிருக்கலாமே போரு....??

இப்படிப் பேசுவதற்குப் பதில் சச்சின்-காம்ப்ளியின் சாதனை ஆவணத்தை பிரேம் போட்டு அழகாக சுவரில் மாட்டி வைத்திருக்கலாமே போர் என்று பலரும் கேட்கிறார்கள்.

அதிர்ச்சியில் சாரதாஷ்ரம் ஹெட்மாஸ்டர்

அதிர்ச்சியில் சாரதாஷ்ரம் ஹெட்மாஸ்டர்

இந்த விவகாரம் குறித்து சாரதாஷ்டிரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷன் சிர்ஷத் கூறுகையில், என்ன சொல்றதுன்னே தெரியலைங்க. இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விஷயங்களை பாதுகாக்க வேண்டியது சங்கத்தின் கடமையாகும் என்றார்.

2006ல் முறியடிக்கப்பட்ட சாதனை

2006ல் முறியடிக்கப்பட்ட சாதனை

சச்சின் - காம்ப்ளியின் இந்த ரன் குவிப்பு 2006-07 வரை உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த ஆண்டில், செயின்ட் பிலிப் பள்ளி மாணவர்களான மனோஜ் குமார்- முகம்மது சாய்பாஸ் ஆகியோர் முறியடித்தனர். இருவரும் இணைந்து 721 ரன்களைக் குவித்து சச்சின்-காம்ப்ளி சாதனையை முறியடித்தனர்.

ரூம் போட்டு யோசிக்கலாம்... இப்படி ரூமுக்குள்ள இருக்கிறதையெல்லாம் போட்டு எரிக்கலாமோ...!!

Story first published: Thursday, February 28, 2013, 13:27 [IST]
Other articles published on Feb 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+