நாக்பூர்: இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 கேட்ச்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 100 கேட்ச்களைப் பிடித்த ஐந்தாவது வீரராகவும் சச்சின் உருவெடுத்துள்ளார்.
ஏற்கனவே ஏகப்பட்ட சாதனைகளை வைத்துக் கொண்டிருக்கும் சச்சினின் சாதனைப் பட்டியலில் கேட்ச் சாதனை லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 100 மற்றும் அதற்கு மேலும் கேட்ச் பிடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இணைந்துள்ளார்.
நாக்பூர் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாடினின் விக்கெட்டை கேட்ச் பிடித்தபோது சச்சின் 100 கேட்ச் பிடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் 100 மற்றும் அதற்கு மேல் கேட்ச் பிடித்த வீரர்கள் வரிசையில், உலகளவில் 27வது இடத்தைப் பிடித்துள்ளார் சச்சின். இந்திய வீரர்களில் இவருக்கு கிடைத்திருப்பது 5வது வீரர் என்ற பெருமை.
இதற்கு முன்பு டிராவிட் (179), சுனில் கவாஸ்கர் (108), அஸாருதீன் (105), வி.வி.எஸ்.லட்சுமண் (105) ஆகியோர் 100 கேட்சுகளுக்கு மேல் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.