Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்பந்தமே இல்லாத சச்சினுக்கு ஏன் இம்புட்டு சந்தோஷம்....!

கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் அந்த அணியின் கில்லாடி வீரர்களை விட சச்சினுக்குத்தான் ரொம்பவே சந்தோஷம். இந்த வெற்றிக்காகத்தான் காத்திருந்தேன் என்று சந்தோஷமாக கூறியபடி ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்து விட்டார்.

சச்சின் தலைமையில் ஐபிஎல் போட்டிகளை சந்தித்தபோது அந்த அணிக்கு கோப்பை கிடைக்கவில்லை. ஆனால் தற்போது ரோஹித் சர்மா அதை சாதித்து விட்டார்.

இந்த வெற்றியால் நேற்று பெரும் குஷியுடன் காணப்பட்டார் சச்சின். இந்த வெற்றியை தனது மனைவி அஞ்சலி, மகளுடன் மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்து கொண்டாடினார் சச்சின்.

நானொரு ராசியில்லாத ராசா

நானொரு ராசியில்லாத ராசா

இந்தப் பாட்டு வரி சச்சினுக்கு ரொம்பவே பொருந்தும். அவருக்கும் கேப்டன் பதவிக்கும் அப்படி ஒரு அம்சப் பொருத்தம். அவர் கேப்டனாக இருந்தபோதெல்லாம் அந்த அணிக்கு உயர்வு கிடைத்ததில்லை.

இந்தியாவானாலும், மும்பை இந்தியன்ஸானாலும்

இந்தியாவானாலும், மும்பை இந்தியன்ஸானாலும்

இந்திய அணி கேப்டனாக இருந்தபோதும் சச்சின்சாதிக்கவில்லை. அதேபோல மும்பை இந்தியன்ஸ்கேப்டனாக இருந்தபோதும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

2010ல் கோட்டை விட்டார்

2010ல் கோட்டை விட்டார்

2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ். எதிராளி, இதே சென்னைதான். அப்போது கேப்டனாக இருந்தவர் சச்சின். போட்டியில் சென்னை அழகான வெற்றியைப் பெற்று சாம்பியனானது. ஏமாந்த்ரா சச்சின்.

பதவி விலகினார்

பதவி விலகினார்

இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் சச்சின். என்ன ஆச்சரியம்.. மும்பை இந்தியன்ஸ் கலக்க ஆரம்பித்து விட்டது.

பஜ்ஜி தலைமையில் முதல் கோப்பை

பஜ்ஜி தலைமையில் முதல் கோப்பை

2011ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரின்போது சச்சின் விளையாடவில்லை. மாறாக வெளியிலிருந்து உற்சாகப்படுத்தினார். ஹர்பஜன் சிங் தலைமையில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆகி சாதனை படைத்தது.

இப்பவும் அப்படியே

இப்பவும் அப்படியே

இந்த வருடமும் அதே போலவே நடந்தது. இந்த முறை சச்சினும், ஜாம்பவான் ரிக்கி பான்டிங்கும் சேர்ந்து சில போட்டிகளில் விளையாடினர். ஆனால் ரன் குவிக்க முடியவில்லை. இதனால் இருவருமே கெளரவமாக விலகி விட்டனர். ஆனால் வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்தபடி இருந்தனர். ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் புதிய ஐபிஎல் சாம்பியனாகியுள்ளது.

இதற்குத்தானே காத்திருந்தேன் பாலகுமாரா

இதற்குத்தானே காத்திருந்தேன் பாலகுமாரா

ஐபிஎல் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற மகிழ்ச்சியில் தற்போது ஓய்வை அறிவித்து விட்டார் சச்சின். இந்த வெற்றிக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன் எனறும் கூறினார் சச்சின்.

ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 10 வருடம் கழித்து கோப்பையை வென்றிருந்தால், அதுவரை ஓய்வு பெறாமல் காத்திருந்திருப்பாரோ சச்சின்...!!!

Story first published: Monday, May 27, 2013, 12:14 [IST]
Other articles published on May 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+