சச்சின் ரிடையர் ஆகி விடுவதுதான் நல்லது... அமர்நாத்தும் சொல்கிறார்

ஏற்கனவே சச்சின் தனது நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கவாஸ்கர், கபில்தேவ், கங்குலி, திலீப் வெங் சர்க்கர் ஆகியோர் கூறியுள்ளனர். இதில் நான் சச்சினாக இருந்திருந்தால் இன்னேரம் ஓய்வு பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளார் கங்குலி.
இந்த நிலையில் முன்னாள் கேப்டன் அமர்நாத்தும் தற்போது சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சச்சின் அத்தனை சாதனைகளையும் செய்து விட்டார். இப்போது அவர் ஓய்வு குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோருக்கும் கண்டிப்பாக ஒரு நாள் ஓய்வு வந்துதான் தீரும். தற்போது சச்சினுக்கான நேரம் வந்து விட்டது. எவ்வளவு வேகமாக ஓய்வு பெறுகிறாரோ, அவ்வளவு நல்லது என்று கூறியுள்ளார் அமர்நாத்.
Story first published: Tuesday, December 11, 2012, 17:06 [IST]
Other articles published on Dec 11, 2012


Click it and Unblock the Notifications