''ஏன் சச்சின் பேசாம போய்ட வேண்டியதுதானே.. எதுக்குப் போராட்டம்??''
கொல்கத்தா: சச்சின் பேட்டிங் செய்ய போராடிக் கொண்டிருப்பதற்குப் பதில் ஓய்வு பெறுவது புத்திசாலித்தனம் என்று முன்னாள் கேப்டனும், சச்சினுடன் சேர்ந்து இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்கார்ரகளில் ஒருவராக விளங்கியவருமான சவுரவ் கங்குலி யோசனை தெரிவித்துள்ளார்.
சச்சின் எப்பப் போவார்.. திண்ணை எப்ப காலியாகும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் காத்திருக்கையில், கங்குலியின் இந்த யோசனையை சச்சின் வரவேற்பா அல்லது முகம் சுளிப்பாரா என்பது தெரியவில்லை.
ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்து விட்டார் சச்சின். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்கிறார். இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் இந்தியா விளையாடப் போகும்போதெல்லாம் சச்சின் குறித்த பேச்சுக்கள் எழுகின்றன.
இந்த நிலையில் சச்சின் பேட்டிங் திறமை குறித்து கங்குலி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மரியாதையுடன் வெளியேறி விடலாம்
நல்ல மரியாதை, சாதனைகளுடன் தற்போது டெஸ்ட் போட்டிக் களத்தில் இருக்கிறார் சச்சின்.

அப்படியே போய்டலாம்.. போராட்டம் தேவையில்லை
இந்த நிலையில் இப்படிப்பட்ட பின்னணியில் விலகுவது நல்லது. மாறாக, ரன் எடுக்கப் போராடி, திணறி கடைசியில் ஓய்வை அறிவிப்பது புத்திசாலித்தனம் அல்ல.

200வது டெஸ்ட்டில் சதம் போடுவாரா...
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு தனது 200வது டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறார் சச்சின். அதில் அவர் சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

லாராவுக்கே அட்வைஸ் செய்தவன்
பிரையன் லாரா போன்ற பெரும் வீரர்களுக்கு எதிராக விளையாடியவன் நான். அவருக்கே ஓய்வு குறித்து அறிவுரைகள் கூறியுள்ளேன். சச்சின் சிறந்த வீரர், அவருடன் விளையாடிய காலம் பொற்காலம்.

போராடுவது சச்சினுக்கு அழகல்ல
ஒவ்வொரு முறையும் ரன் எடுக்கப் போகும்போது சச்சின் போராடக் கூடாது. அது அவரைப் போன்ற திறமையான வீரர்களுக்கு அழகல்ல என்றார் அவர்.


Click it and Unblock the Notifications