Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வுக்குப்பின் சினிமாவில் நடிக்கலாம்! மனம் திறந்த சச்சின்!

Sachin Tendulkar
மும்பை: கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் இருந்து நடிப்பதைப் பற்றி முடிவு செய்ய உள்ளதாக மாஸ்டர் பேஸ்ட் மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

பிரபல ஹிந்தி திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே நடித்து வெளியாகவுள்ள 'மாய்' ஹிந்தி படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழாவில் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். மாய் திரைப்படம் பிப்ரவரி 1ம் தேதி வெளியாகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சச்சின் பாடல் கேசட்டை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர், தற்போது தனது மனம் கிரிக்கெட்டில் லயித்து இருப்பதாகவும் சினிமாவில் நடிப்பதற்கான தருணம் இன்னமும் நெருங்கி வரவில்லை என்றும் கூறினார்.

80 வயதான ஆஷா போஸ்லே தற்போது 'மாய்' ஹிந்தி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். அதேபோல தானும் ஓய்வுக்குப்பின்னர் நடிப்பதைப் பற்றி யோசிப்பேன் என்று கூறினார்.

சமீபத்தில் ஓருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சினுக்கு தற்போது 39 வயதாகிறது. ஏற்கனவே விளம்பரங்களில் டாப் மாடலாக இருக்கும் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற உடன் பெரிய திரையில் நாயகனாக எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, January 24, 2013, 8:40 [IST]
Other articles published on Jan 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+