ரிடையர்மென்ட் அறிவித்த கையோடு குடும்பத்தோடு முசோரி கிளம்பிய சச்சின்
டேராடூன்: சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கையோடு சச்சின் தனது குடும்பத்தாருடன் முசோரிக்கு சென்றுள்ளார்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் டெண்டுல்கர் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அவர் தனது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன் மற்றும் மகள் சாராவுடன் ஜாலிகிராண்ட் விமான நிலையத்தில் வந்திறங்கியதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
அங்கு சச்சினைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்று நினைத்தனர். ஆனால் அவர் அங்கிருந்து நேராக மலைப் பகுதியான முசோரிக்கு கிளம்பிவிட்டார். அவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியா தத்தும் சென்றுள்ளார். நேற்று மாலை 6 மணிக்கு சச்சின் தனது குடும்பத்தாருடன் முசோரியில் உள்ள சஞ்சய் நரங் ஹோட்டலுக்கு வந்தார்.

Story first published: Monday, December 24, 2012, 15:51 [IST]
Other articles published on Dec 24, 2012


Click it and Unblock the Notifications